ஓசூரில் வடிவமைக்கப்பட்ட குறைந்த விலையிலான மூன்றாம் தலைமுறை வென்டிலேட்டர்!

ஓசூரில் வடிவமைக்கப்பட்ட குறைந்த விலையிலான மூன்றாம் தலைமுறை வென்டிலேட்டர்!

ஓசூரை சேர்ந்த திரு அகிலேஷ் ஜோசப் மைக்கில் பி, BTech மெக்கானிக்கல் மற்றும் MTech எம்பேடெட் சிஸ்டம் பயின்றுள்ளார்.  இவர் கடந்த 6 ஆண்டுகளாக ஐ.ஓ.டி (IoT) மற்றும் செயற்கை அறிவாற்றல் (AI)  துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 24 வயது ஆகிறது.

குறைந்த விலையில், மூன்றாம் தலைமுறை தொழில் நுட்பம் கொண்ட வெண்டிலேட்டரை இவர் முழுக்க முழுக்க ஓசூரிலேயே வடிவமைத்து, தனது குழுவின் துணையுடன் செயல்படும் மாதிரியை உருவாக்கியுள்ளார்.

இந்த கருவி, இன்றைய கோவிட்-19 மருத்துவ தேவையின் போது பெரிதளவும் உயிர் காப்பதில் பயன் தரத்தக்கதாகவும், பிற நேரங்களில் தீவிர மருத்துவ பிரிவில் (ICU), ஒரு உயிர் காக்கும் கருவியாகவும் செயல்படும் திறன் கொண்டது.

இந்தக் கருவி, தானியங்கக் கூடியதாக மருத்துவரின் கட்டளையை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை கட்டுப்படுத்த 10 இன்ச் அளவுள்ள தொடுதிறையில் பயனர் வரைகலை இடைமுகம்  (கிராபிக் யூசர் இன்டெர்பேச் – GUI ) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு அமைப்பை கொண்டு, நோயாளிக்கு செலுத்தப்படும் உயிரி காற்றின் (Oxygen) அளவு, காற்றின் (Atmospheric Air) அளவு, மொத்த காற்றின் அளவு என நோயாளிக்கு செலுத்தப்படும் காற்றின் அளவை மில்லி லிட்டெர் அலகில் கணக்கிட்டு செலுத்த இயலும். காற்றளுத்தம், மூச்சு சுளர்ச்சி ஆகியவற்றையும்  கட்டுப்படுத்த இயலும்.

இது காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவை குறித்த தகவலையும், காற்றளுத்தம், உயிரிகாற்றின் அளவு ஆகியவை குறித்த புள்ளி தகவல்களையும் காட்டும்.

கருவி செயல்பாட்டில் ஏதேனும் கோளாறு ஏற்படுமேயானால் அது உடனடியாக அதை உணர்ந்து எச்சரிக்கை ஓசையை ஏற்படுத்தி மருத்துவ குழுவை எச்சரிக்கும்.

இது ஐ ஓ டி தொழில் நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு மருத்துவரால் நோயாளியின் நிலையை கண்டறிந்து இந்த வெண்டிலேட்டர் கருவியை இயக்க இயலும்.

இதற்கு ஒப்பான வெண்டிலேடர் கருவிகள் தற்போது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சுமார் ரூ 250,000 விலைக்கு விற்கப்படும் நிலையில், ஓசூரிலேயே இதை வடிவமைத்து உற்பத்தி செய்வதால் இதன் விலை, சந்தையில் சுமார் ரூபாய் 90,000 அளவிற்கு விற்க இயலும்.

இந்த கருவியை சுமார் மூன்று நாட்களில் வடிவமைத்து, 4 நாட்களில் மாதிரியை உற்பத்தி செய்து காட்டியுள்ளனர்.

ஓசூரில் உள்ள சிறு குறுந்தொழிற் சாலைகளில் [CNC மற்றும் கடைசல் (லேத்)] 30% அளவிற்கு இந்த கருவி உற்பத்திக்கு பயன்படுத்தினால் 6 நிமிடத்தில் ஒரு கருவி என்ற அளவில் உற்பத்தி செய்ய இயலும்.

இன்று இதன் செயல் வடிவ விளக்கம் ஓசூர் விஜய் மருத்துவமனை தலைமை மருத்துவர் இராசேஷ் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்டது.

அகிலேஷ் அவர்களின் இந்த வெண்டிலேட்டர் செயல் வடிவ மாதிரி குழுவில், திரு சந்தோஷ் (Aargee Electronics Equipments), திரு மாதேஸ்வரன் (Technic CNC Engineering), திரு சிவா (SKP RO Systems) மற்றும் முனிராஜ் (Rathnadeva Industries) ஆகியோர் ஒருங்கிணைந்து செயலாற்றினர்.

கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியர் மரு. பிரபாகர் இ ஆ ப அவர்கள் அகிலேஷை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறினார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: