செய்திகள்
அயோத்தியில் ராமர் கோவில் நிலம் வாங்க நடந்த முறைகேடு தொடர்பில் உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைமைக்கும் - அனைத்திந்திய பாஜக தலைமைக்கும் மோதல்போக்கான சலசலப்பு ஏற்பட்டுள்ளது... பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும். வேலூர் சிஎம்சியில் மருத்துவப் பணியாளர்கள் 200 பேருக்கு கரோனா தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய உழவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணை ஒமைக்ரானுக்கு தனி தடுப்பூசி


வடகொரிய தலைவர் என்ன ஆனார்?

வடகொரிய தலைவர் என்ன ஆனார்?

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறான செய்திகள் பரவி வரும் இந்த நிலையில், தென்கொரியா சொல்கிறது "அவர் நலமுடனும் உயிருடன் இருக்கிறார்" என்று.

தென்கொரியாவிற்கான வெளியுறவு கொள்கைகள் குறித்து அறிவுரை வழங்கும் மூன் சுங் இன் கருத்து தெரிவிக்கையில், "கிம் ஜாங் உன் உயிருடனும் நலமுடனும் உள்ளார்.   அவர் ஏப்ரல் 13ஆம் நாள் வடகொரியாவின் வொன்சான் பகுதியில் வாழ்ந்து வருகிறார். அந்தப்பகுதியில் எவ்வகையான சந்தேகத்திற்கு இடமான நகர்வுகளும் இதுவரை கண்டறியப்படவில்லை".

கிம் அவர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் நாள் அவரது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கவில்லை. அந்த நாள் முதல், அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வகையான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அவர் கடந்த நான்கு நாட்கள் எவ்வகை அரசு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை என வடகொரிய அரசின் செய்தி குறிப்பு கூறுகிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் உளவுத் துறை அமைப்பானது, கிம், மிக மோசமான உடல் நிலையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது உளவு குறிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மற்றொரு அமெரிக்க உளவு அமைப்பு அலுவலர் கருத்துக் கூறுகையில், "கிம் அவர்களின் உடல்நிலை வருந்தத்தக்க இருப்பினும், அவரது நிலை குறித்து தெளிவான தகவல் கண்டறிவது மிக இக்கட்டான உள்ளது" என்றார்.

தென்கொரியாவின் நிகழ்நிலை ஊடகமான டெய்லி என் கே தனது செய்தியில், பெருமளவு புகை பிடிக்கும் பழக்கம்கொண்ட வடகொரிய அதிபர் கிம், பருமனான உடல் வாகையும், அளவிற்கு அதிகமான மன அழுத்தம் கொண்ட வேலைகளையும் தொடர்ந்து செய்த நிலையில், இதய அறுவை மருத்துவம் மேற்கொண்டதாகவும், மருத்துவத்திற்கு பின் யாங்சன் மாவட்டத்தில் ஓய்வு எடுத்து வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது .

அதே ஊடகம், அறுவை மருத்துவம் ஏப்ரல் 19ஆம் நாள் பியாங்யாங் மருத்துவமனையில் நடைபெற்றதாகவும், அறுவை மருத்துவத்திற்கு பின், பெரும்பாலான மருத்துவர்கள் அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று விட்ட நிலையில், ஒரு சில மருத்துவர்கள் அங்கேயே இருந்து கிம் அவர்களை கண்காணித்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நாள் (26.04.2020) வடகொரியாவின் அரசிதழான ரோடோங் சின்முன், தனது செய்தியில், கிம் அவர்கள் சாம்ஜியோன் நகரை அழகு படுத்திய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்ததாக செய்தி வெளியிட்டது.  இந்த நன்றி தெரிவிப்பை கிம் தாமே பகிர்ந்தாரா அல்லது அரசு இதை ஒரு சடங்காக செய்தி என வெளியிட்டதா என உறுதிபடுத்த இயலவில்லை.

செயற்கைக்கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், வடகொரியாவின், ஓசோன் பகுதியில் கிம் அவர்களின் பெருவாழ்வு குடியிருப்பு தோட்டத்தின் அருகே ஒரு தொடர் வண்டி நிறுத்தப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது.

தொடர்வண்டி நிற்குமிடம், கிம் குடும்பத்தார் மட்டுமே பயன்படுத்தும் ஒரு பகுதியாகும். தொடர்வண்டி நிற்பது, அவர் அந்தப் பகுதியில் தங்கியிருப்பதற்கான ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது.

தொடர் வண்டி ஏப்ரல் 21ஆம் நாள் அந்தப் பகுதிக்கு வந்தடைந்த வகையில் நிற்கும் படமும், ஏப்ரல் 23ஆம் நாள் கிளம்பிச் செல்ல திசை மாறி நிற்கும் படமும் செயற்கைக்கோள் உதவியுடன் பெறப்பட்டுள்ளது.

பொதுவாக வட கொரிய தலைவர் மரணித்தால் அதுதொடர்பான அரசு செய்தி குறிப்பானது அவ்வளவு எளிதில் வெளியிடப்படுவது இல்லை.  கிம் அவர்களின் தந்தை மரணம் அடைந்து பல நாட்கள் கழித்தே செய்தி வெளியிடப்பட்டது.

வடகொரியாவில் அதன் தலைவர், கடவுளுக்கும் மேலாக போற்றப்படுகிறார்.  அவர்கள் குறித்த செய்தியும் அவ்வளவு எளிதில் பயப்படுவது இல்லை.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: