நடிகை காஜல் அகர்வால் குறித்த வதந்தி

நடிகை காஜல் அகர்வால் குறித்த வதந்தி

நடிகை காஜல் அகர்வாலை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் தொடர்பு படுத்தி வெளியான வதந்தியால் திரையுலகில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் முன்னனி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அவர் பல்வேறு படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தகள் பல வைத்துள்ள நிலையில் தற்போது கொரோனா முடக்கத்தினால் வெளி தொடர்புகள் ஏதும் இன்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

கடந்த சில நாட்களாக அவர் குறித்த வதந்தி பரவி வருகிறது.  அந்த வதந்தியின் உண்மை தன்மை குறித்து ஓசூர் ஆன்லைன் தனது திரை ஊடகப்பிரிவு வாயிலாக புலனாய்வு மேற்கொண்டது.

புலனாய்வின் முடிவில், நடிகை காஜல் அகர்வால் குறித்த வதந்தியின் பின்னனி குறித்த தகவல்கள் கிடைத்தன.  இது அதிர்ச்சி தரத் தக்கதாக இருந்தது.

முடக்கத்தினால் முடங்கி கிடந்த காஜல், எதற்காக இத்தகைய அதிர்வூட்டம் முடிவை மேற்கொண்டார் என்ற தகவல் கிடைத்ததும் திரை சார்ந்த பதிவுகள் இடும் நமக்கு சற்று மன வருத்தம் தந்ததென்னவோ உண்மைதான்.

ஊரடங்கு முடிந்து நிலைமை சரியாகி மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் போது, தான் ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களுக்கு நாட்கள் பிரித்து கொடுப்பது மிகப்பெரிய இடரலாக இருக்கும் என்றும் அதனால் ஒப்பந்தமான ஒரு படத்தில் இருந்து வெளியேறிவிடுவது என முடிவு செய்திருப்பதாக காஜல் குறித்து வதந்தி பரவியது.

அதிலும் சிரஞ்சீவி நடிகை ஆச்சார்யா படத்தில் இருந்து காஜல் வெளியேறவுள்ளார் என்பது தான் அந்த வதந்தி.

இதில் பரபரப்பு என்னவென்றால், நடிகை திரிஷா ஒப்பந்தமாகியிருந்த அதே வேடத்தை தான், காஜல் தன் முயற்சிகளால் தட்டிப்பரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த நிலையில், காஜலும் வெளியேற்றப்பட்டாரா அல்லது சிரஞ்சீவியுடன் நடிகைகள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்ந்து நடிப்பதற்கு தயங்கி வெளியேறுகிறார்களா என்ற ஐயம் திரையுலகில் ஏற்படத்துவங்கியது.

இந்த செய்தி பெருமளவு பரவிய நிலையில் காஜல் அகர்வாலின் மேலாளர் ஓசூர் ஆன்லைனுக்கு விளக்கம் அளித்துள்ளார். "இந்த செய்தியில் உண்மை எள்ளளவும் இல்லை. காஜல் ஆச்சார்யா படத்தில் உறுதியாக நடிக்கிறார்" என அவர் கூறினார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: