விசாகப்பட்டினம் நச்சுக்காற்று விபத்தும் அதன் ரூபாய் 1 கோடி இழப்பீடு பின்னணியும்

விசாகப்பட்டினம் நச்சுக்காற்று விபத்தும் அதன் ரூபாய் 1 கோடி இழப்பீடு பின்னணியும்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நெகிழ்ம பொருட்களுக்கான மூலப்பொருள் உற்பத்தி செய்யும் ஆலையில் 07 மே 2020 காலையில் நச்சுக் காற்று வெளியேறி நடந்த ஒரு விபத்தில், இதுவரை 11 பேர் மரணம் அடைந்தனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 200 பேர் வெண்டிலேட்டர் உதவியுடம் மூச்சு விட்டுக்கொண்டு உயிருடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

இந்த விபத்து ஸ்டைரீன் எனப்படும் நச்சுக்காற்று, ஆலையில் இருந்து வெளியேறி பெரும் தீவிபத்து ஏற்பட்டதால், ஏற்பட்ட விபத்தாகும்.  இந்த காற்றானது, நெகிழ்ம பொருள் உற்பத்திக்கான அடிப்படை மூலப்பொருள் உற்பத்தி செய்வதற்கான ஒரு மூலப்பொருளாக பயன்படுகிறது.

இந்த எல்ஜி பாலிமர்ஸ், எல்ஜி கெமிக்கல்ஸ் என்கிற பாரளவில் வேதிப்பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் குழும பிரிவின் ஒரு பிரிவாகும்.  இவை அனைத்தும் தென் கொரிய நாட்டை சார்ந்த எல்ஜி குழுமத்திற்கு உரியது.

ஆலையின் வரலாறு:

1962 ஆம் ஆண்டுல், ச்றீராம் குழுமம், இந்துச்தான் பாலிமர்ஸ் என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் ஆலையை நிறுவியது.

1978 ஆம் ஆண்டில், இந்த ஆலையை மல்லையாவின் யுனைடட் பிவரீச் குழுமம் வாங்கியது.

அதை 1997 ஆம் ஆண்டு தென் கொரிய நாட்டின் எல்ஜி குழுமம் வாங்கியது,

எல்ஜி கெமிக்கல்ஸ் ஆண்டறிக்கையின்படி, எல்ஜி பாலிமர்ஸ், அதன் பல துணை நிறுவங்களுள் ஒன்று.  இவர்கள் இந்தியாவில் மூன்று துணை நிறுவங்கள் அமைத்து பல்வேறான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதில் நெகிழி கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், வீட்டு பயன்பாடு நெகிழி பொருட்கள் என அதன் அட்டவனை நீழ்கிறது.

பாரளவில், எல்ஜி கெமிக்கல்ஸ் -இன் விற்றுமுதல் சுமார் ரூபாய் 1.7 ட்ரில்லியன்.  எல்ஜி பாலிமர்சின் விற்று முதல் சுமார் ரூபாய் 142 கோடி மட்டுமே.  அதாவது, அவர்களின் தொழில் அளவில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு இதன் விற்றுமுதல் சிறியது.

இந்த ஆலையின் வருவாயும் ரூபாய் 4 கோடி மட்டுமே.  இது எல்ஜி கெமிக்கல்ஸ் பிரிவின் வருவாயில் 0.1 விழுக்காடு அளவே.

2010 ஆம் ஆண்டு வருமான வரி ஏய்ப்பு என இந்த ஆலை மீது வருமான வரித்துரையினர் வழக்கு தொடுத்தனர்.  அதன் பின் அந்த வழக்கு ஆலைக்கு வாய்ப்பாக முடிவுற்றது.

இந்த எல்ஜி பாலிமர்ஸ், அமிலம் மற்றும் பெட்ரோ அமிலம் கூட்டமைப்பில் செல்வாக்குமிக்க உறுப்பினராக இருக்கிறது.

இந்த கூட்டமைப்பில் ரிலையன்ஸ், ஓன்.என்.ஜி.சி, டி.சி,எம், ச்றீராம், சன்மார் கெம்ப்ளாஸ்ட், கெயில் மற்றும் ஃபினோலெக்ஸ் ஆகியவை இருக்கின்றன.

எல்ஜி கெமிக்கல்ஸ், பாரளவில் லித்தியம் மின்கலம் உற்பத்தியில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்ற முன்னெடுப்பில் தனது தொழில் முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது.  இது அமெரிக்க டெச்லா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தோனேசிய நாட்டில், தமது தொழிற்சாலைகள் பலவற்றை நிறுவியுள்ள இந்த எல்ஜி கெமிக்கல்ஸ், கொரோனா ஆய்வு கருவிகளை நன்கொடையாக பல கோடி ரூபாய் மதிப்பிற்கு கொடுத்து தன் தொழிலை காத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது புரிகிறதா, ஏன் ஆந்திர அரசு, செத்தால் ரூபாய் 1 கோடி என தாராளம் காட்டுகிறது என்பதை?

Share this Post:

தொடர்பான பதிவுகள்: