ஒசூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு ஜெபக்கூட்டம்

ஒசூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு ஜெபக்கூட்டம்

ஒசூர் அருகே சூளகிரி வட்டத்திற்குட்பட்ட சின்னகுத்தி ஊரிலுள்ள அரசுப்பள்ளி ஒன்றில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சிலர் ஜெபக்கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

அந்த ஊரிலுள்ள பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் குழந்தைகளை பள்ளி வகுப்பறையில் சமூக இடைவெளி இல்லாமல் முழங்காலிட்டு நிற்க வைத்து அவர்களுக்கு மத போதனைகளையும், ஜெப பாடல்களையும் பாடி ஜெபக்கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஒரு சிலர் முககவசங்கள் அணிந்துள்ளனர். மாணவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட மற்றவர்கள் எந்த பாதுகாப்பு முககவசங்களும் அணியாமல் செப கூட்டத்தில் பங்கெடுக்கிறார்கள்.

இந்த காணொளி காட்சிகள் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அரசு கொரோனா நச்சுயிரி பரவுதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நோய் பரவும் வகையில் மாணவர் மற்றும் குழந்தைகளை சமூக இடைவெளி இல்லாமல் உட்கார வைத்து ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டது பொதுமக்கள் நடுவில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அரசுப்பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது இந்த நேரத்தில் எப்படி பள்ளியை இவர்கள் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: