ஒசூர் அருகே ஏரியில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானை மற்றும் காட்டு எருமை கூட்டங்கள்

ஒசூர் அருகே ஏரியில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானை மற்றும் காட்டு எருமை கூட்டங்கள்

ஒசூர் அருகேயுள்ள அஞ்செட்டி காட்டுப் பகுதியில் நடுக்குட்டை என்கிற ஏரியில் காட்டுயானைகள் மற்றும் காட்டு எருமை கூட்டங்கள் தங்களது குட்டிகளுடன் தண்ணீர் குடித்து தாகத்தை தணித்து சென்றன.

ஒசூர் அருகேயுள்ள அஞ்செட்டி, தேன்கனிகோட்டை, அய்யூர், உரிகம் உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் காட்டுயானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் பெரும் அளவில் வாழ்கின்றன.

போதிய மழை இல்லாததால் காடுகளில் காட்டு விலங்குகளுக்கு காடுகளுக்குள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தண்ணீரை தேடி காட்டு விலங்குகள் காட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.

இந்த நிலையில் ஒசூர் அருகேயுள்ள அஞ்செட்டி காட்டுப்பகுதியில் நடுக்குட்டை ஏரியில் காட்டுயானைகள் கூட்டம் ஆனந்தமாக தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்தது.

அமைதியான சூழலில் குட்டிகளுடன் தாய் யானைகளும் சேர்ந்து நீண்ட நேரமாக தாகம் தணிக்க தண்ணீர் குடித்தது.

இதேபோல காட்டு எருமை கூட்டங்களும் அந்த ஏரியில் தண்ணீர் குடித்து தாகத்தை தணித்து சென்றன.

காட்டுப்பகுதியில் உள்ள ஒரு சில ஏரிகள், காட்டு உயிரிணங்கள் தங்களது தாகம் தணிக்க உதவியாக இருக்கின்றன.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: