செய்திகள்
3 சிலிண்டர், பஸ் பயணம் இலவசம்... பெண்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி தெளித்த பிரியங்கா காந்தி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி சிறப்புப் பஸ்கள் இயங்க தொடங்கின ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் போலி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திரிணமூலில் இணைந்த பாஜகவின் 5வது எம்எல்ஏ! திருத்தணி முருகன் கோவிலில் வெளிப்புற ஆக்கிரமிப்புகள் அகற்றம் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன?

கோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது.  அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன?

ஒன்று மட்டும் தின்னம்.  அடுத்த சில நாட்களிலோ அல்லது கிழமைகளிலோ அல்லது திங்கள்களிலோ இந்த நச்சுயிரி தாக்கம் முடிவுற போவதில்லை.  இது இன்னும் பல ஆண்டுகளுக்கு நம் தொடர்கதையாக இருக்கத்தான் போகிறது.

மனித இனம் ஒரு சமூக உறவு கொண்ட விலங்கினம் என்றால் அது மிகை இல்லை.  

இந்த புவியில் மனித இனம் தோன்றிய நாள் முதல் அது ஒரு சமூக அமைப்பாகவே வாழ்ந்து வந்துள்ளது.  கூடி வாழ்தல், ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருத்தல், உறவு முறைகளை கொண்டிருத்தல் என மனிதனின் கூடி வாழும் தன்மையை பட்டியலிடலாம்.

மனித இனத்தினால் தமைப்படுத்தப்படுவதையும், முடங்கி கிடப்பதையும் ஏற்றுக்கொள்ளவே இயலாது.

எடுத்துக்காட்டாக, வெளியில் சுற்றினால் கோவிட் தொற்று ஏற்பட்டு மரணம் நிகழ வாய்ப்புள்ளது என எந்த வகையில் எடுத்துச் சொன்னாலும் அடங்க மறுத்து, உயிரே போயினும், எம் சமூக உறவுகளை சந்திக்காமல் இருக்க முடியாது என்கிற மன அழுத்தத்தில் மனிதன் நாடு, இனம், மொழி வேறுபாடுகளை கடந்து வெளியில் சுற்றி வருகிறான்.

அமெரிக்க நாட்டில், நியூ யார்க் மாநில ஆளுனர் ஆண்ட்ரூ, கடந்த ஏப்ரல் திங்களில் முழு முடக்கத்தை நடைமுறை படுத்த முற்பட்ட பொழுது, அங்குள்ள மக்கள் முடக்கத்திற்கு எதிராக ஒரே குரலில் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்பொழுது அவர், “மரணத்தை விட கொடியது மன அழுத்தம்” என எடுத்துரைத்தார்.

அவரது கூற்று முற்றிலும் உண்மை என கொள்ளலாம்.

பொது மக்களே பல்வேறு வகைகளில் மன அழுத்ததிற்கு உள்ளாகிறார்கள் என்றால் மருத்துவம், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தீடீர் என உயர்ந்திட்ட வேலை பழுவாலும், உறவுகளுடன் மகிழ்வாக நேரம் செலவிட வாய்ப்பில்லாமலும் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  இந்த துறையினர்கள் தம் துறை சார்ந்தவர்கள் பலர் நச்சுயிரி தாக்குதலுக்கு உள்ளாகி மடிகிறார்கள் என்கிற செய்தி கேட்கும் போது, மேலும் மன அழுத்தத்திற்கு உட்படுகிறார்கள். இத்தகைய மன அழுத்தம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மீது கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், சுமார் 84% குடும்பங்களில் மனைவி அல்லது  கனவர் குடும்ப வன் கொடுமைகளுக்கு இந்த 100 முடுக்கப்பட்ட நாட்களுக்குள் உட்பட்டு இருப்பது தெரியவருகிறது.

இத்தகைய வன்முறைகள் நடை பெறுவதற்கு மன அழுத்தங்களே அடைப்படையாகிறது.

இந்தியாவில், ஏற்கனவே சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மன அழுத்த நோயினால் பாதிப்பிற்கு உள்ளாகி அதற்கான மருத்துவம் எடுத்து வருகிறார்கள்.

பெண் குழந்தை திருமணங்கள் கட்டுக்கடங்காமல் எண்ணிக்கை உயர்வத்தற்கும் இந்த முடக்கம் வழிவகை செய்கிறது.  இதனால் பல பெண் குழந்தைகள் மன அழுத்ததிற்கு உட்பட இருக்கிறார்கள், உட்படுகிறார்கள்.

மன நலம் நன்றாக உள்ளவர்களே இந்த முடக்கத்தால் மன நலம் குன்றும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால், ஏற்கனவே மன அழுத்த நோய்களுக்கு உள்ளானவர்கள் நிலை இந்த முடக்கத்தால் மீண்டெழ முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது.

பொதுவாக மன நலம் குன்றியவர்கள் தமது வேலைகளை ஒரு வரிசை முறையில் செய்து பழகியிருப்பார்கள்.  தற்பொழுது முடக்கத்தால் அந்த வரிசையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.  இதை மன நலம் குன்றியவரால் மாற்றி அமைத்து எளிதில் அதற்கொப்ப வாழ பழக இயலாது.

மன இறுக்கம் நோய் உள்ளவர்கள் பொதுவாக யாரிடமும் கலகலப்பாக பழக மாட்டார்கள்.  தனிமையை விரும்புபவர்களாக தோன்றும்.  பொதுவாக அவர்கள் தாம் நம்பும் மற்றும் விரும்பும் நபர்கள் தம்மிடம் தொடர்பில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.  இந்த முடக்கம் இவர்களது இந்த தொடர்புகளை அறுப்பதாக அமைவதால் அவர்கள் மேலும் மன அழுத்தத்திற்க்கு உள்ளாகும் நிலையை ஏற்படுத்துகிறது.

இந்த முடக்கத்தால் பலரும் தம் உறவுகளிடம் இருந்து பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.  பலர் தனிமையில் தவித்து வருகின்றனர்.  இதனால் பலர் மன அழுத்த நோய்க்கு உட்படுவதற்கான வாய்ப்பை இந்த முடக்கம் ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்ததிற்கு உட்படுபவர்களின் மனம், அந்த அழுத்ததில் இருந்து விடுபட காத்திருக்கும்.  இதை பயன்படுத்தி பல மொள்ளமாரிகள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.  அப்படி ஏமாந்தவர்கள் மேலும் மன அழுத்தத்திற்கு மறைமுகமாக தள்ளப்படுகிறார்கள்.

பல நாடுகள் இந்த முடக்கத்தால் மன அழுத்தத்திற்கு உட்பட்டுள்ள தமது மக்களுக்கு அதில் இருந்து விடுபடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நம் இந்திய நாட்டை பொறுத்தவரை இதுவரை அரசு தம் ஊழியர்களின் மன அழுத்தத்தை விடிவிக்கும் நடவடிக்கையை கூட முன்னெடுக்கவில்லை.

திரை அரங்குகளுக்கு செல்வது, பெரிய கடை கூடங்களுக்கு செல்வது, மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று தன் பெருமை பாராட்டுவது என மனித இனம் தம் வாழ்வை அமைத்து வந்துள்ள இந்த நிலையில், இந்த கோவிட் நச்சுயிரி தாக்கம், இவை எல்லாம் தவறு, தனிமையே... சமூக இடைவெளியே சிறந்தது என்கிற புது சித்தாந்தத்தை புகுத்தியுள்ளது.

முடங்கி போன பொருளாதாரம் உடனடியாக மீண்டெழும் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை.  இதனால் பலர் தம் வாழ்வாதாரத்தை இழப்பர்.  உலக பொருளாதார வல்லுனர்கள் கணிப்பின் படி, இனி மக்கள் பெருமளவில் பயணத்தை தவிர்ப்பர்.  வீட்டில் இருந்தே ஏதாவது வேலை செய்து வருவாய் ஈட்ட முடியுமா என முனைவர்.  தோல்விகள் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப்போகும்.

பொருளாதாரமும் மன அழுத்த நோய்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பினைந்தவை.  பொருளாதார நெருக்கடி ஏற்படும் ஆண்டுகளில் தற்கொலை நிகழ்வுகள் பெருமளவில் நடைபெறுவதாக புள்ளியியல் தகவல்கள் எடுத்துரைகின்றன.

நம் இந்திய நாட்டை பொறுத்தவரை இந்த முடக்கத்தால் நடந்தே செத்தவர்கள் ஏராளம்.  பொது வழங்கல் மூலம் ஏழை எளியவருக்கு கொடுக்கப்பட வேண்டிய உணவு பொருட்களில் 14% அளவிற்கு மட்டுமே பயணாளர்களை இதுவரை சென்றடைந்துள்ளதாம்.  ஆக, பட்டினி சாவு ஒருபுறம், நோய் தொற்றினால் மரணங்கள் ஒரு புறம், தனிமையால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைகள், வாழ்வாதாரமற்ற நிலையால் தற்கொலைகள் என பல வகையில் மனித இனம் அழிய இருக்கிறது.

கட்டுரை:  சூசை பிரகாஷ் அ
தொ பே 7639992424

Share this Post:

தொடர்பான பதிவுகள்: