வரி கட்டுபவர் இறந்துவிட்டால், வாரிசுகள் தெரிவிக்க வேண்டியதில்லை

வரி கட்டுபவர் இறந்துவிட்டால், வாரிசுகள் தெரிவிக்க வேண்டியதில்லை

வருமான வரி கட்டி வருபவர் இறந்துவிட்டார் என்றால், அது தொடர்பான தகவலை வருமான வரித்துறைக்கு சட்டப்படியான வாரிசுகள் தெரிவிக்க வேண்டும் என்பதில்லை, என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வருமானம் வரி கட்டுபவர் தனக்கான சட்டப்படி வாரிசுகளை அடையாளம் காட்டவில்லை அல்லது தனது சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக கொடுத்துவிட்டார் என்ற ஒரு நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

சொத்துக்கான வாரிசுரிமை பெற்றவர்கள், வருமான வரி கட்டி வந்தவர் இறப்பின் தொடர்பான தகவல்களை, வருமானவரி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 13 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை அன்று தீர்ப்பளித்துள்ளது.

வலுக்கட்டாயமாக, வரி கட்டுபவர் இறப்பு குறித்து வருமான வரி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று எந்த சட்ட வடிவிலான வாய்ப்பு இல்லாத நிலையில், நீதிமன்றம், தாம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளதாக எடுத்துரைத்துள்ளது.

"சட்டப்படியான வாரிசுகள் இல்லை அல்லது சொத்தை தொண்டு நிறுவனத்திற்கு கொடையாக கொடுத்த நிலையில், வருமான வரி கட்டுபவர் மற்றும் அவரது பான் எண் தொடர்பான தகவல்களை, சொத்தை பெற்றவர்கள் சட்ட நடைமுறை வழி ஏதுமின்றி எப்படி வருமான வரித்துறைக்கு தெரிவிக்க இயலும்?" என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்த வரி விதிப்பிற்குறியவர் ஒருவர், தனக்கு சில வருவாய்கள் எந்த வகையில் கிடைத்தது என்ற தகவலை கொடுக்காததால், கடந்த மார்ச் 2019 -ல், வருமான வரித்துறை, வருவாய் தொடர்பில் விளக்கமளிக்குமாறு அந்த நபருக்கு அறிவிப்பு ஓலை அனுப்பியது.

அறிவிப்பு ஓலையை பெற வேண்டிய நபர், டிசம்பர் 2018 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவரால் பதில் அளிக்க இயலாத நிலை அறியாத வருமானவரித்துறை, அவருக்கு விளக்கம் கோரும் அறிவிப்பு ஆணை அனுப்பியது.  தகவல் த்ராததற்கு ஏன் தண்டத்தொகை அவரிடமிருந்து பெற கூடாது என்பதற்கான விளக்கமும் கேட்டு ஓலை அனுப்பப்பட்டது.

அவர் இறந்து விட்டார் என்ற தகவல் அறிந்த வருமானவரித்துறை, அந்த நபரின் சட்ட வாரிசுகள், தங்கள் துறைக்கு, வரி கட்டுபவர் இறந்துவிட்டார் என்ற தகவலை தெரிவிக்கவில்லை எனச்சொல்லி, தண்டத்தொகை ஒன்றை விதித்து ஓலை அனுப்பியது.

இது தொடர்பில் வாரிசுகள் தொடர்ந்த வழக்கில், வருமானவரித்துறை வழங்கிய அனைத்து ஓலைகள் மற்றும் ஆணைகளை செல்லத்தக்கதல்ல என டெல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பினால் சொத்துக்கான சட்டப்படியான வாரிசுகள், வருமானவரித் துறையின் எல்லா நடவடிக்கைகளிலும் இருந்து தப்ப இயலாது.  வருமான வரி கட்டுபவர், தான் இறப்பதற்கு முன், அந்த நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்யவில்லை எனில், சொத்திற்கான சட்ட வாரிசுக்கு, வருமானவரி தொடர்பான தகவலை தாக்குதல் செய்யும் கடமை அவர்களிடம் உள்ளது என சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

மேலும்,  சட்டப்படியான வாரிசுகள், வருமானவரித்துறை நடவடிக்கைகளுக்கு தாமாக முன்வந்து வரி கட்டுபவரின் ஒரு கட்சிக்காரராக இணைந்து கொள்ளலாம் அல்லது வரி கட்டுபவரின் நடவடிக்கைகளுக்கு தான் சட்டப்படியான வாரிசு என தன்னை இணைத்துக் கொள்ளலாம்.

வருமான வரித்துறை தனது அறிவிப்பு ஓலைகளை இறந்தவர் பெயரில் இனி அனுப்பக்கூடாது.  அப்படி அனுப்பினால், அது இனி சட்டப்படி செல்லாது.  இறந்தவர் தொடர்பான தகவல் தங்களுக்கு கிடைக்கப் பெற்றபின், இறந்தவரின் சட்டப்படியான வாரிசுகளுக்கு அறிவிப்பு ஓலைகளை அனுப்பி, அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவேண்டும், எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: