யோகா என்பது பாலியல் உணர்வு தூண்டும் செயல்களில் ஒன்றா?

யோகா என்பது பாலியல் உணர்வு தூண்டும் செயல்களில் ஒன்றா?

மதத்தையும் தெய்வீகத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, இன்றைக்கு யோகா என்பது, உடல்  நலத்திற்கான உடற்பயிற்சி என்ற வகையில் கடந்த சில ஆண்டுகளாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

மதமும், தெய்வீகமும் யோகாவில் இருந்து விலகி நிற்க்கும் நிலையில், உடல் நலத்திற்கான உடற்பயிற்சி யோகா என்பதையும் மறந்து, பால் உணர்வுகளைத் தூண்டும் கொச்சை செயல்களில் ஒன்றாக மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூகுள் நிறுவன தரவின் படி, கடந்த 5 ஆண்டுகளாக யோகா தொடர்பான தேடல்கள், கொச்சையான பாலுணர்வு தூண்டும் சொற்களின் துணைகொண்டு தேடப்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.  

அதாவது செக்ஸி யோகா, யோகா செக்ஸ் வீடியோ, செக்ஸி யோகா வீடியோ போன்ற சொற்கள் கொண்டு, மக்கள் பெருமளவு யோகா தொடர்பாக தேடுவதாக கூகுள் தேடு சொற்கள் தரவுகளின் புள்ளி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளடைவில் யோகா என்பது பாலியல் உணர்வு தூண்டும் செயல்களில் ஒன்றாக முன்னிறுத்தப்பட்டு விடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

யோகா என்ற சொல்லில், பெருமளவு வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு உள்ளடங்கியுள்ளது என்பதை உணர்ந்துகொண்ட பணத்திற்காக தேடி அலையும் சிலர், இன்றைக்கு யோகா என்பதை பணம் ஈட்டுவதற்கான ஒரு தொழிலாக மாற்றி விட்டனர்.

உலக அளவில் யோகா என்பது உடற்பயிற்சி என்று முன் நிறுத்தப்படுவதால், அது தொடர்பில் பல கவர்ச்சியான ஆடைகள் வடிவமைக்கப்பட்டு சந்தைப்படுத்துதல் நிகழ்ந்வேறி வருகிறது.

இப்படி, யோகா தொடர்பாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் பொருட்கள், தம் உடலின் அங்க வளைவுகளை கவர்ச்சியாக வெளிக்காட்டும் ஆடைகளை இறுக்கமாக அணிந்துகொண்டு,  இளம்பெண்களை காட்சிப்படுத்தி, சந்தைப்படுத்தப்படுகின்றன.

விளம்பரம் என்ற பெயரில், ஆணும் பெண்ணும் சேர்ந்து யோகா பயிற்சி மேற்கொள்ளப்படும் காட்சிகளும் கொச்சையான வடிவில் அமைக்கப்பட்டு, யோகா முன் நிறுத்தப்படுகிறது.

கவனிக்கத்தக்க கொடுமை என்னவென்றால், கவர்ச்சியான யோகா ஆடைகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் சந்தை படுத்தப்படுகிறது.

முன்பெல்லாம், அதாவது 10 ஆண்டுகளுக்கு முன், யோகா ஆசிரியர் என்பவர், பார்க்கும்போதே கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் தூண்டுபவராக இருந்தார்.

யோகா பயிற்சியானது, ஆலய வளாகங்களில் அல்லது ஊர் பொது திடலில் அல்லது வீடுகளின் வரவேற்பறையில், ஒரு தெய்வீக சூழலில் மேற்கொள்ளப்பட்டது.

இன்றைக்கு இது முற்றாக மாறி, யோகா பயிற்சி கூடங்கள் என்ற பெயரில், தன் உடலின் இறுக்கமான ஆடை அணிந்து தாமே தம் உடலில் வளைவுகளை ரசிக்கும்படி சுவர்களில் ஆடிகள் பொருத்தப்பட்டு, ஒளிரும் விளக்குகள் நடனமாட, யோகா ஒரு கவர்ச்சிப் பொருளாக பயிற்றுவிக்கப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு முன் யோகா என்பது ஆண்களுக்கானது என்ற வகையில் மட்டுமே இருந்தது.  அதிலும் அவர்கள் பருத்தி ஆடை அணிந்து, யோகா பயிற்சிகளை மேற்கொள்வார்கள். பெண்கள் முறையான ஆடைகள் அணிந்து, அதை தாமும் கற்றுக் கொண்டனர்.

யோகா தொடர்பான இன்றைய விளம்பரங்களில், ஆண்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கவர்ச்சியான உடல் அமைப்பு பெற்ற பெண்கள் யோகா மேற்கொள்வது போன்று தோற்றுவிக்கப்படுகிறது.

பெண்களின் மனநிலை மாற்றமும், தெய்வீக யோகா கவர்ச்சியாக மாறியதற்கு அடிப்படையாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

தம் உடலை மூடி வாழ்வது பெண்ணிற்கு அழகு என்ற பழைய சிந்தனை நிலைமாறி, நெஞ்சை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வை கொண்ட நடை பெண்ணிற்கு அழகு என்கிற மன நிலை ஏற்பட்டுள்ளதால், யோகா ஒரு கவர்ச்சிப் பொருளாக மாறியதில் வியப்பில்லை.

தெளிவாகச் சொல்வதானால், பெண்கள் தம் உடல் வளைவுகளை செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும் என விரும்பினாலும், உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லாது போவதால், அதற்கு தீர்வாக இத்தகைய கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் யோகா பயிற்சிக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.

பணமும் கவர்ச்சியும் என்றென்றைக்கும் ஒன்றிணைந்து தெய்வீகத்தன்மையை கூட கொச்சையானதாக மாற்றி அமைக்கும் என்பதற்கு யோகா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: