75 ஆவது பிறந்த நாளை, நாடு கொண்டாடிய நிலையில், மக்கள் பதட்டம்

75 ஆவது பிறந்த நாளை, நாடு கொண்டாடிய நிலையில், மக்கள் பதட்டம்

நாடு விடுதலை அடைந்து 74 ஆண்டுகள் கடந்த சூழலில், இந்திய மக்கள் ஒரு பதட்டமாக மற்றும் மகிழ்வற்ற வாழ்வை மேற்கொள்ளும்படி கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தள்ளப்படுகிறார்கள் என்று கருத்துக்கணிப்பு முடிவு எடுத்துரைகின்றது.

பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஆய்வின் முடிவில், அரசானது பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை, ஒரு சில தனி நபர்களுக்கு மட்டுமே முன்னெடுத்துச் செல்கிறது என்று மக்கள் கருதுவதாக புள்ளிதகவல் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வானது நாட்டின் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறிவதற்காக மேற்கொள்ள பட்டதாகும்.

மோடி அவர்களின் ஆட்சியின் கீழ் ஊழல் ஒழிந்து விடும், வேலைவாய்ப்பு பெருகிவிடும் என்பதான எதிர்பார்ப்புகள், மக்களிடம் இருந்து மெல்ல மெல்ல விலகத் துவங்கி இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

ஒரு குறிப்பிட்டவர்களுக்காக மட்டுமே அரசு செயல்படுவதாக கருத்து மக்களிடையே நிலவுகிறது.

ஒழுங்குமுறை படுத்தப்பட்டது துறைகளில்தான் தமக்கு வேலை வேண்டும் என்ற மனநிலையில் இருந்து விலகுதலும், பிழைப்பிற்கு எந்த வழி கிடைத்தாலும் மேற்கொள்வதற்கான மனநிலையும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இனி  சிறப்பாக வாழ்வதற்கு வழி இல்லை, ஆகவே வாழ்வதற்கு ஏதாவது ஒரு வழி இருந்தால் போதும் என்று மக்கள் கருதத் துவங்கி உள்ளனர்.

2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த 2020ஆம் ஆண்டு, மக்கள் அரசை நம்புவதை, பாதி அளவிற்கு குறைத்து மதிப்பிடுகின்றனர்.  நடுவன் அரசை ஆதரிக்கும் ஊடகங்கள், வறுமை ஒழிப்பு மற்றும் கோவிட் 19 ஒழிப்பு நடவடிக்கைகளில் நடுவன் அரசு சிறப்பாக செயல்படுவதாக கட்டுரைகள் வரைந்து வரும் இந்த வேளையில், இந்த கணக்கெடுப்பு வேறு ஒரு எதிர்நிலை கருத்தை எடுத்துரைக்கிறது.

அரசால் மக்களுக்கு முன்னேற்றம் தரும் மாற்றங்களை ஏற்படுத்த இயலாது என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்து கணிப்பு 2019ஆம் ஆண்டு 215 மாவட்டங்களில், 22,000 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.  2020 ஆம் ஆண்டு, கணிப்பின் துல்லிய தன்மையை மேம்படுத்துவதற்காக, 280 மாவட்டங்களிலும் 30,000 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துக்கணிப்பை "லோக்கல் சர்கில்ஸ்" என்ற அமைப்பு மேற்கொண்டது.

உலக அளவில், மக்கள் பதட்டமான மற்றும் மகிழ்வற்ற நிலையில் வாழும் நாடுகள் பட்டியலில், இந்தியா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.  பட்டியலில் இருந்து சிறிய நாடுகளை கழித்துவிட்டால், இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.  உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தை கொண்டுள்ள நாடான இந்தியாவில், மக்கள் பதட்டமான நிலையிலும் மகிழ்வற்ற வாழ்வையும் மேற்கொண்டுள்ளார்கள் என்கிற தகவல், அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

68 ஆண்டுகளாக, 2012 வரை வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்திய பொருளாதாரம், கடந்த சில ஆண்டுகளாக, செங்குத்தான சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: