பக்கவாதம் தாக்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே அறிகுறிகளை காட்டும்

பக்கவாதம் தாக்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே அறிகுறிகளை காட்டும்

பக்கவாதம் தாக்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே அறிகுறிகளை காட்டும்

அமெரிக்க நரம்பியல் கல்விக்கழகம், சுமார் 2500 பக்கவாத அறிகுறிகள் கொண்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 500க்கும் மேற்பட்டோர், 7 நாட்களுக்கு முன்னதாகவே பக்கவாத அறிகுறிகளைக் கொண்டிருந்தனர்.  கிட்டத்தட்ட அனைவரும் பக்கவாத தாக்குதல் நடைபெறுவதற்கு பல மணி நேரம் முன்னதாகவே அதற்கான அறிகுறிகளுக்கு உட்பட்டிருந்தனர்.

பக்கவாதம் ஏற்படுபவர்களில் 80 விழுக்காட்டிற்கு மேலானோர் குருதி ஓட்டம் தடைபடுவதால் பக்கவாத தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

மூளைக்குச் செல்லும் தமனிகள் மற்றும் மூளையில் உள்ள சிறு குருதி நாளங்கள் சுருங்கி விடுவதால் அல்லது குருதி உறைதலால் அடைக்கப் படுவதால் பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது.  குருதி ஓட்டம் தடைபடுவதால் மூளை அணுக்கள் சிதைவடைந்து உடலின் செயல்பாடு பாதிப்படைகிறது.

இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்கள், சுமார் 7 நாட்களுக்கு முன்பிருந்தே அல்லது குறைந்தது பல மணி நேரம் முன்பே அதற்கான அறிகுறிகளை கொண்டிருப்பார்கள் என்பது ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

ஒரு சிலருக்கு, முகத்தில் தெளிவாக அறிகுறிகள் வெளிப்படும்.  அவர்களின் முக அமைப்பில் மாறுதல் ஏற்படும்.  வாய் சற்று கோனியபடி இருக்கும்.

சில அறிகுறிகளில், ஒருவர் தன் கையை உயரே தூக்கினால், தூக்கிய நிலையில் நிலை நிறுத்த இயலாது.  சிலருக்கு கை மற்றும் தோள் பகுதியில் மதமதப்பான உணர்வு ஏற்படும். சிலர் தமது கை உழைகிறது என்பதை உணர்வார்கள்.

சிலர், பேசும்போது குழறி பேசுவார்கள்.  அவர்களால் சில வார்த்தைகளை உச்சரிக்க இயலாது.

வெகு சிலரால் திடீர் என முறையாக நடந்து செல்ல இயலாது.  நடக்கும் பொழுது சற்று தள்ளாடியபடி நடப்பார்கள்.

சிலருக்கு திடீரென பார்வை மங்கும்.  இது மிகக் கொடிய அறிகுறி.

எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் நபர் திடீரென மந்தநிலையை கொண்டிருப்பார்.

இத்தகைய அறிகுறி கொண்டோரை உடனடியாக மருத்துவ உதவி பெற வைக்கவேண்டும்.

நன்றி:  https://www.aan.com/

Share this Post:

தொடர்பான பதிவுகள்: