வீடுகளில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான சில வழிகள்!

வீடுகளில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான சில வழிகள்!

வீடுகளில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான சில வழிகள்!

இந்த 21-ம் நூற்றாண்டில், மின்சாரம் இல்லையேல் மனித வாழ்க்கை இல்லை, என்கிற அளவிற்கு மின்சாரத்தின் தேவை மனிதர்களுக்கு வாழ்க்கையின் ஒரு பங்காக அமைந்துவிட்டது.

மின்சாரத்தை பயன்படுத்தும் பொழுது கிடைக்கப் பெறுகின்ற இன்பம், மின் கட்டண தொகை கட்ட வேண்டிய சூழல் வரும் பொழுது, ஒரு பெரும் இடர்பாடாக பலருக்கும் அமைந்து விடுகிறது.

மின்சார பயன்பாட்டை தவிர்க்க இயலாது. ஆனால் தேவையற்ற மின்சார செலவினங்களை, நாம் எடுக்கின்ற சின்னஞ்சிறு முயற்சிகளால் தவிர்த்துவிட இயலும்.  இப்படி சேமிக்கின்ற மின்சாரம், பெருமளவில் கட்டண செலவினங்களை குறைத்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

எவ்வகைகளில் மின்சாரத்தை சேமிக்கலாம் என்பதை பார்க்கலாம்:

1.  மின்சார சேமிப்பின் முதல் அடிப்படை, மின் விசிறிகள், மின் விளக்குகள், தண்ணீர் கொதிகலன், தொலைக்காட்சி, கைபேசி மின் ஏற்றி (Mobile Charger) ஆகியவற்றை, தேவை உள்ள மட்டும் பயன்படுத்திவிட்டு, உடனுக்குடன் அவற்றிற்கான மின் இணைப்பை துண்டித்து விட்டால், பெருமளவு மின்சாரத்தை சேமிக்கலாம்.

2.  மின் விளக்குகளை, முடிந்தவரை LED மின்விளக்குகளால் மாற்றிக்கொள்வது சிறந்த வழி.

3.  மீன் தொட்டி விளக்கு, அதற்கு காற்று உந்தும் கருவிகள், தண்ணீர் வெப்பநிலை கட்டுப்படுத்தி, தண்ணீரை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் கருவிகள் என 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்குவதால், நாளொன்றிற்கு சுமார் 100 Watt/hour x 24 Hours = 2.5 kW அலகுகள் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

4.  குளியலறை தண்ணீர் கொதிகலன்களைப் பொருத்தவரை, தண்ணீர் தொட்டியுடன் கூடிய கொதிகலன்களை தவிர்த்துவிட்டு, உடனடி தண்ணீர் சூடேற்றிகளை பயன்படுத்துவது மின்சார சேமிப்பை கொடுக்கும்.

5.  AC பயன்படுத்துகிறீர்கள் என்றால், தேவையின்றி கதவுகளைத் திறந்து மூடுவதை தவிர்க்க வேண்டும்.  சாளரங்களில் காற்று கசிவு இருக்கிறதா என்பதை கண்டறிந்து, அவற்றை தவிர்க்க வேண்டும்.  ஞாயிறின் ஒளி, குளிர்விக்கப்பட்ட அறையை, நேரடியாக தாக்காத வண்ணம் Shade Net போன்றவற்றை பயன்படுத்தி, வெளியிலிருந்து வரும் வெப்பத்தை குறைக்க முயல வேண்டும்.

6.  மின் பொருட்களுக்கு BEE (Bureau of Energy Efficiency) கொடுக்கும் ஐந்து விண்மீன் (5 Star) மதிப்பீடு உள்ளதா என கவனித்து பொருளை வாங்கவேண்டும்.

7.  தடையற்ற மின் அமைப்பு (UPS) நிறுவுகிறீர்கள் என்றால், முடிந்தவரை ஞாயிறு திறன் (Solar Energy) பயன்பாடுடன் கூடிய அமைப்புகளை பொருத்த வேண்டும்.  அமைப்புகள், அவற்றின் பயன்பாட்டிற்கு என 24 மணி நேரமும் குறிப்பிட்ட அளவிலான மின்சாரத்தை தொடர்ந்து பயன்படுத்தும் என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.  புதிய தொழில்நுட்பம் கூடிய UPS, தேவையற்ற மின்சார செலவினங்களை தவிர்ப்பதற்கான முறைகளை (Power Saving Mode) உள்கட்டமைப்பு கொண்டுள்ளன.

8.  அடுக்களைகளில் (Kitchen) பயன்படுத்தப்படும் மின் கருவிகள், பயன்பாடு இல்லாத நேரங்களில், மின் சொருகிகளில் இருந்து பிரித்து (Unplug) வைக்க வேண்டும்.  தொடர்ந்து அவை சொருகிய நிலையில் இருந்தால், மின்சாரத்தை குறைந்த அளவில் பயன்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

9.  சமையலில், பொருளை சூடு ஏற்றுவதற்கு, பெருமளவு மின்சாரம் செலவிடப்படுகிறது.  சொன்னால் வியப்பாக இருக்கும்! உணவு பொருளை சூடேற்றும் பொழுது, அதற்கான சட்டியை ஒரு மூடி போட்டு மூடினால் பெரிய அளவில் மின்சாரம் சேமிக்கலாம்.

10.  பழைய மின்சார அடுப்புகளை தவிர்த்துவிட்டு, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, தூண்டல் அடுப்பு (Induction Stove) மற்றும் நுண்ணலை சூளை (Microwave Oven) பயன்படுத்துவது மின்சார சேமிப்பில் பெருமளவில் உதவும்.

11.  மின் அழுத்த ஏற்றத்தாழ்வுகள், தேவையின்றி மின் செலவினங்களை ஏற்படுத்துகிறது.  இதை தவிர்க்க, மின் அழுத்த ஏற்றத்தாழ்வு துண்டிப்புகளை (Voltage Protectors) பயன்படுத்தலாம். இந்த கருவிகள், விலை குறைவானதாகவும், பொருத்திக் கொள்வதற்கு எளிதானதாகவும், உயர் மின் அழுத்தம் அல்லது குறைவு மின் அழுத்தம் ஏற்பட்டால் மின்சார வழங்கலை துண்டிக்கும் விதமாகவும் அமைகிறது.

12.  இணையதளங்களில் செய்திகள் படிக்க, கணினி பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, கைபேசியை பயன்படுத்தலாம்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: