மனித மூளை எவ்வாறு தரவுகளை பிரித்து சேமிக்கிறது?

மனித மூளை எவ்வாறு தரவுகளை பிரித்து சேமிக்கிறது?

நாளொன்றுக்கு மனிதன் பல்வேறு காட்சிகளை கண்ணால் பார்த்தும், தகவல்களை காதால் கேட்டும், நாற்றங்களை மூக்கால் முகர்ந்தும், தொடு உணர்தல், வாய்ப் பேச்சால் தகவல் பகிர்தல் என பல்வேறு வகைகளில் தகவல் தரவுகளை திரட்டுகிறான்.

சிறு வயது முதல் திரட்டப்படும் தரவுகள், சூழ்நிலை மற்றும் தேவையின் பொருட்டு, மூளை அவ்வப்போது தகவல்களாக விரைந்து தருகிறது.  திரட்டப்படும் தரவுகள் வெவ்வேறு வகையாக இருந்தாலும், அவை முறையாக பிரிவுகளாக அடுக்கி சேமிக்க படவில்லை என்றால், தேவைக்கு ஏற்ப தரவுகளை மூளை தேடி எடுப்பது என்பது, சிக்கலான செயலாக அமையும்.

இதுகுறித்த ஆய்வு பல்வேறு நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.  குறிப்பாக எலிகள் மற்றும் பிற கொறித்து உண்ணும் விலங்குகள் மீது நடத்தப்பட்டது.

இப்பொழுது அமெரிக்காவில் National Institute of Neurological Disorders and Stroke -ல் மேற்கொள்ளப்பட்ட மனிதர்கள் மீதான ஆராய்ச்சி முடிவுகள், மூளையில் இரண்டு வகையான அணுக்கள், தரவுகளை பிரித்து அடுக்கி சேமித்து வைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  இந்த ஆராய்ச்சியின் மூலம், மனிதனின் நினைவு திறன் குறித்த தெளிவுகளை ஏற்படுத்த வழிவகை செய்யும்.  இதனால் Alzheimer குறைபாடுகளுக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த ஆராய்ச்சியை, பேராசிரியர் முனைவர் Ueli Rutishauser தலைமையேற்று வழிநடத்தினார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் -ல் உள்ள Cedars-Sinai Medical Center -ல், நரம்பியல் அறுவை மருத்துவத்துறை, நரம்பியல், உயிரியல் மருத்துவ அறிவியல், ஆகியவற்றுக்கான பேராசிரியராக பணிபுரிகிறார்.

பலகட்ட ஆராய்ச்சிகள், மனித மூளை, மனிதனின் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் தகவல்களை, நிகழ்வுகளின் அடிப்படையில் தொகுத்து சேமித்து வைத்து, மீண்டும் நிகழ்வுகளின் அடிப்படையில் தேவைக்கு ஏற்ப நினைவாற்றல் செயல்பட்டு தகவல்களை தருகிறது, என எடுத்துச் சொல்கிறது.  இப்படி தொகுத்து பிரித்து சேமித்துவைக்க, மூளை எதன் அடிப்படையில் செயல்படுகிறது? என்கிற கேள்வியை கொண்டு தான் இந்த புதிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

விடை தேடிய இந்த ஆராய்ச்சிக் குழு, மருந்திற்கு குணப்படுத்த இயலாததால், அறுவை மருத்துவத்திற்கு வழிவகை செய்வதற்காக, மண்டை ஓட்டை ஊடுருவி, மூளையின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவு செய்யப்படுகின்ற, 20 வலிப்பு நோயாளிகளிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நோயாளிகளிடம், வெவ்வேறு விதமான காணொளி தொகுப்புகள் காட்டப்பட்டு அவர்களின் மூளை செயல்பாடு மீதான தாக்கம் மற்றும் அது தொடர்பான தரவுகள் எவ்வாறு மூளையின் சேமிப்பில் மாற்றங்களை தூண்டுகிறது என்பன குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.  இதன் முடிவில், காணொளியின் துவக்கம் மற்றும் முடிவு குறித்து தகவல்கள் தனித்தனி தொகுப்புகளாக சேமிக்கப்படுகிறது என்பது கண்டறியப்பட்டது.

அதாவது, காணொளியின் திரைக்கதை ஓட்டத்தில், வெவ்வேறு நிகழ்வுகள் உள்ளடக்கப்பட்டு இருந்தாலும், நிகழ்வுகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி, தொடர்புடைய நிகழ்வுகளை எல்லாம் ஒரே தரவாக மூளை சேமித்து வைக்கிறது.

எடுத்துக்காட்டாக, தமிழ் திரைப்படத்தில், காதல் - சண்டை - ஆடல் பாடல் - நகைச்சுவை என பல்வேறு காட்சிகள், பல கட்ட அடுக்காக எடுக்கப்பட்டிருந்தாலும், நாயகன் - நாயகி தொடர்பான கதையின் அடிப்படையான காட்சிகள் மட்டும் தனி தரவு கோப்பாக சேமிக்கிறது மூளை. நகைச்சுவை காட்சிகளை தனியாகவும், சண்டைக்காட்சிகளை தனியாகவும், ஆடல் பாடல் காட்சிகளை வகைப்படுத்தி தனியாக சேமித்துக் கொள்கிறது மூளை!

மூளை எவ்வாறு இப்படி நிகழ்வுகளை வகைப்படுத்தி சேமிக்கிறது, மூளையின் செயல்பாட்டில் ஆய்வுகள் மேற்கொண்ட பொழுது, இரண்டு வகையான மூளை அணுக்கள், தேவைக்கு ஏற்ப வேகமாக செயல்பட்டு நினைவுப் பதிவுகளை மேற்கொள்கிறது.  எடுத்துக்காட்டாக, ஒருவகை மூளை அணுக்கள், கதையின் காட்சிகளை மென்மையான துண்டுகளாக மாற்றுகிறது, மற்றொருவகை மூளை அணுக்கள், காட்சிகள் நிறைவுபெறும் உள்ளது, தொடர்புடைய வற்றை ஒன்றாக சேர்த்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்து சேமிக்க வைக்கிறது.

இது தொடர்பில் பல கட்ட ஆய்வுகள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட இருக்கின்றன.  இத்தகைய ஆராய்ச்சிகளால், மூளை நினைவாற்றல் தொடர்பான பலவகை இடர்பாடுகளுக்கு வரும் நாட்களில் தீர்வு கிடைக்கும்.


National Institute of Neurological Disorders and Stroke

Share this Post:

தொடர்பான பதிவுகள்: