சிறிய அளவிலான குடிப்பழக்கம் கொண்டவராக இருந்தாலும் சரி, குடிக்கு அடிமையானவராக இருந்தாலும் சரி, அதற்கு ஏற்ப மூளை அணுக்கள் மெல்ல மெல்ல சாகும் என்கிறது புதிய ஆராய்ச்சி முடிவுகள்.
நாளொன்றுக்கு ஒரு பெக் மது குடித்தாலும், அரை குப்பி பீர் குடித்தாலும் மூளை அணுக்கள் மடிவது மற்றும் செயல்பாடுகள் குறைந்து விடுவது உறுதி. இது தொடர்பான ஆராய்ச்சியை, சுமார் 36 ஆயிரம் குடிப்பதை சரி என்று ஏற்றுக் கொள்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.
குறைந்த அளவு குடிப்பழக்கம் இருந்தாலும், அது மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. மூளையின் செயல்பாட்டுத் திறன், நாள் ஒன்றுக்கு இரண்டு பெக் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு, அவர்களைவிட 2 வயது மூத்தவர்களுக்கு ஒப்ப செயல்பாடு குறைந்து போய்விடும். மதுவின் அளவை பொருத்து, மூளையின் வயது மூப்பு செயல்பாடு குறைவு ஏற்படுகிறது.
குடிக்கு அடிமையானவர்களின் மூளையின் அளவு சிறுத்து மற்றும் அதன் வடிவ அமைப்பும் மாறி அமைகிறது என்கிறது இந்த புதிய ஆராய்ச்சி முடிவு.
வாரத்திற்கு ஒரு முறை குடிப்பது கூட குற்றமா? அது கூட மூளையின் திறனை பாதிப்பை ஏற்படுத்துமா? என கேட்பவர்களுக்கு ஒரே பதில்... ஆம்!
குறிப்பாக 50 வயதை கடந்தவர்கள், குடி பழக்கத்தின் அடிப்படையில், மூளை செயல்பாட்டில் பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்கின்றனர் என்கிறது இந்த கண்டுபிடிப்பு.
இந்த புதிய கண்டுபிடிப்பானது, பிற மருத்துவம் மேற்கொள்பவர்கள் மற்றும் அரசின் குடி தொடர்பான வழிகாட்டுதல் முறைகள் இருக்கு நேர் எதிர் மறை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய கண்டுபிடிப்பில், பிறர் குறை சொல்லிவிடக் கூடாது என்பதன் பொருட்டு மட்டுமே, பெரும் எண்ணிக்கையிலான குடிப்பழக்கம் கொண்டவர்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் மூலம், வெள்ளை மற்றும் சாம்பல் உங்கள் கொண்ட மூளையின் பகுதிகள், குடிப்பழக்கத்திற்கு ஏற்ப அளவில் குறைந்து விடுகின்றன.
குடிப்பழக்கம் இல்லாதவர், ஒரு பெக் மது அருந்தும் பழக்கத்திற்கு உள்ளானால், மூளையின் அளவில் பெரிய அளவிலான மாற்றத்தை காண இயலவில்லை. ஆனால், ஒரு பெக் என்ற அளவிலிருந்து, 2 பெக் என்ற அளவிற்கு குடியின் அளவு மாறும்பொழுது, மூளையின் அளவில் தெள்ளத் தெளிவான மாற்றம் காணப்படுகிறது.
மூளையின் அளவு மாற்றம், குடியின் அளவிற்கு நேரியலாக (linear) பாதிப்படைவதில்லை. மாறாக, குடியின் அளவு கூடுதலாகும் பொழுது, பாதிப்பின் அளவு கடுமையாகிறது.
குடியினால் மக்கள் நன்மை அடைவதை காட்டிலும், "நானும் குடிகாரன்" என்று சொல்லிக் கொள்வதற்காக குடிப்பதற்கு பழகுபவர்களின் பாதிப்பு பெரிது.
இந்த ஆராய்ச்சி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட. கீழ்காணும் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்:
1. Reagan R. Wetherill is a research assistant professor of psychiatry in the University of Pennsylvania Perelman School of Medicine.
2. Henry R. Kranzler is the Benjamin Rush Professor in Psychiatry and director of the Penn Center for Studies of Addiction at Penn s Perelman School of Medicine.
3. Gideon Nave is the Carlos and Rosa de la Cruz Assistant Professor in the Wharton School Department of Marketing and the Wharton Neuroscience Initiative at Penn.
4. Remi Daviet is an assistant professor of marketing in the Wisconsin School of Business at the University of Wisconsin-Madison.
5. Daviet was first author and Wetherill, Nave, and Daviet were co-corresponding authors on the paper.
6.
i. Kanchana Jagannathan
ii. Nathaniel Spilka
iii. Henry R. Kranzler of Penn s Perelman School of Medicine
iv. Gokhan Aydogan of the University of Zurich
v. Philipp D. Koellinger of the University of Wisconsin-Madison.