இடித்துத் தள்ளப்படும் சவுதி அரேபிய ஏழைகளின் குடியிருப்பு பகுதிகள்

இடித்துத் தள்ளப்படும் சவுதி அரேபிய ஏழைகளின் குடியிருப்பு பகுதிகள்

இந்த பாரில் உள்ள பணக்கார நாடுகளின் பட்டியலில் முதல் இடங்களை பிடிக்கும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அங்கேயும் மக்களிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏழைகளின் குடியிருப்பு  (சேரி) பகுதிகள் தோன்றுகின்றன என்பது வியப்பாக உள்ளது.

சவுதி அரேபியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஜித்தா.  இது அந்நாட்டின் மெக்கா மாநிலத்தில் அமைந்துள்ள தொழில் நகரமாக விளங்குகிறது.

அந்த நகரத்தில் சவுதி அரேபிய அரசினால் இப்பொழுது பல பில்லியன் டாலர் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அரசின் பார்வையில், ஏழை எளியவர்களின் சேரிப்பகுதி, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் கூடாரமாக விளங்குகிறது என்பதாகும்.   ஆனால் அப்பகுதி மக்கள் இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுக்கின்றனர்.  அவர்களை பொருத்தவரை, இந்த பகுதிகள் ஏழைகளின் புகலிடம்.  இது சவுதி அரேபிய ஏழைகளுக்கு மட்டுமின்றி, சவுதி அரேபியாவுக்கு பிழைப்புக்காக குடிபெயர்ந்தவர்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும் வீடுகள் பகுதியாகும்.

பொதுவாக சவுதி அரேபியா அரசை எதிர்த்து நாட்டு மக்கள் குரல் எழுப்புவது இல்லை.  ஆனால் இந்த சேரி பகுதிகள் அகற்றப்படுவது குறித்து அப்பகுதியில் வாழ்ந்த ஏழை எளியவர்கள் டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்ப்புக்குரல் எழுப்புகின்றனர்.

இது குறித்தெல்லாம் சவுதி அரேபிய அரசு எவ்வகையிலும் பொருட்படுத்தாமல், ஏழ்மையான பகுதி கட்டடங்களை அகற்றுவதில் தீவிர முனைப்பு காட்டி அப்புறப்படுத்தி வருகிறது.

இந்த ஏழைகளின் வீடுகளை இடித்து தள்ளுவதற்கு அரசு சொல்லும் நீதி, இப்பகுதி மக்கள் வேசி தொழில் செய்கின்றனர், மேலும் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுகின்றனர் என்பதாகும்.  இத்தகைய குற்றச்சாட்டுகள் அப்பகுதி மக்களை கடுமையாக மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.  இந்த பகுதி ஏழைகளை பொருத்தவரை, இப்படியான சமூகத்திற்கு எதிரான தீங்கிழைக்கும் செயல்கள் எதுவும் இப்பகுதியில் நடைபெறவில்லை என ஆணித்தரமாக சொல்கின்றனர்.

நாடுகள் எதுவாக இருந்தாலும், ஏழைகளின் வாழ்வு நிலை இதுதான்.  மனிதன் பிற விலங்குகளை அழித்து புவியை தனது என பறைசாற்றி வந்தான்.  இப்பொழுது மனிதர்களிடையே ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு தோன்றி, பூமி முழுவதும் பணக்காரர்களின் வாழ்விடம் என்பதாக பறைசாற்ற பட்டு வருகிறது.  மனித இனத்தின் அழிவின் துவக்கம் இதுதானோ?


Share this Post:

தொடர்பான பதிவுகள்: