எம்.பி. மீது பாய்ந்த மின்காந்த அலை

எம்.பி. மீது பாய்ந்த மின்காந்த அலை

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே,  உழவு நிலங்கள் வழியாக பல உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் எடுத்துச்செல்லப்படுகிறது.

உயர் மின் கோபுரத்துக்கு அருகில் அல்லது அடியில் வசிப்பவர்கள், வேளாண்மை செய்பவர்கள்  ஆகியோருக்கு மின்காந்த அலைகளால் புற்றுநோய் முதற்கொண்டு பல்வேறு நோய்கள் மற்றும் நீண்டகால பாதிப்புகள் ஏற்படுவதாக பார் நலம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி இருக்கின்றன.

இந்நிலையில், ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி திருப்பூர் மாவட்டம், ராசிபாளையத்தில் இருந்து தருமபுரி மாவட்டம், இண்டூர் வரை செல்லும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் 400 கிலோ வாட் உயர்மின் கோபுரத்தின் அடியில், விசயமங்கலம் அருகே  மூனாம்பள்ளி என்ற பகுதியில் சனிக்கிழமை இரவு  10.30 மணிக்கு ஆய்வு மேற்கொண்டார்.

உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்படும் மின்காந்த பாதிப்பை ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேச மூர்த்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கையில் வைத்திருந்த மின்சார குழல் விளக்குகள் எரிந்தன. மேலும்,  அவரது உடலிலும் மின்காந்த அலை பாய்ந்து கொண்டிருந்ததை, மின் ஆய்வு கருவி மூலம் தெரியவந்தது.

அப்போது அவர்  உயர் மின் அழுத்தக் கோபுரத்தின் அடியில்  நின்று மின் இனைப்பு இல்லாத குழல் விளக்கை கையில் பிடித்துப் பார்த்தார்.  

அப்போது குழல் விளக்கு மின் காந்த அலைகளின் விசையால் ஒளிர்ந்தது.  மேலும், மின் ஆய்வு கருவியை அவரின் உடம்பில் வைத்தவுடன் மின்காந்த அலைகள் பாய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொண்ட  கணேசமூர்த்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக ஓர் உறுதிமொழி ஆவணத்தை ஆயத்தம் செய்து கையெழுத்திட்டு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காண்பிப்பதற்காகவும், மக்களவையில் இதுகுறித்து பேசவும் புகைப்படங்களை எடுத்துச் சென்றார்.

நடுவன் சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடமும், மின்சாரத் துறை அமைச்சரிடமும் இது தொடர்பாக பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: