நிலவில் 800 கோடி மனிதர்கள் வாழலாம்!

நிலவில் 800 கோடி மனிதர்கள் வாழலாம்!

கிட்டத்தட்ட 100,000 ஆண்டுகள் மனிதர்கள் வாழ தேவையான உயிர்காற்று இருப்பதாக நாசா ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், கலைஞர்களால், எடுத்துக்காட்டுக்காக கற்பனையாக வரையப்பட்டது.

நிலவில் மனிதர்களை குடியேற்ற ஆய்வாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், அங்கு 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 100,000 ஆண்டுகள் வாழ தேவையான உயிர்காற்று (ஆக்சிஜன்) இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் சிலிக்கா, அலுமினியம், மேக்னிஷியம் ஆக்சைடுகள், இரும்பு போன்ற தாதுக்கள் பெருமளவில் உள்ளதாகவும், இந்த தாதுக்கள் அனைத்தும் உயிர்காற்றை உள்ளடக்கியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

மேலும், ரிகோலித் எனப்படும் நிலவின் மேற்பரப்பில் 1.4 டன் கனிமங்கள் உள்ளன.
இதில் 1 கன மீட்டருக்கு சுமார் 630 கிமீ அளவு உயிர்காற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நாசாவின் கூற்றுப்படி ஒருவர் ஒரு நாளைக்கு வாழ்வதற்கு சுமார் 800 கிராம் உயிர்காற்று தேவை. அதன்படி நிலவில் உள்ள உயிர்காற்று மூலம் அங்கு மனிதர்கள் 100,000 ஆண்டுகளுக்கு வாழலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு ஆகும்.  

ஆனால், கணிமங்களுடன் கலந்த நிலையுல் இருக்கும் உயிர்காற்றை பிரித்தெடுப்பது எளிதானதா? என அவர்கள் விளக்கம் கொடுக்கவிலை.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: