கோழிகளை முதலில் வளர்க துவங்கியது தமிழர்களா?

கோழிகளை முதலில் வளர்க துவங்கியது தமிழர்களா?

கோழிகளை யார் முதலில் வீட்டு பறவையாக வளர்க்க துவங்கியது?  வளர்க்கத் துவங்கிய நிலையில், கோழிகளுக்கு எத்தகைய மரியாதை கொடுக்கப்பட்டது? கோழிகளை உணவாக உண்ண கற்றுக் கொண்ட முதல் மனிதர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கு புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று விளக்கங்களை கொடுத்துள்ளது.

சுமார் 10,000 ஆண்டுகளாக மனிதர்களால் கோழிகள் சீனாவில் வீட்டுப் பறவையாக மாற்றி அமைக்கப்பட்டது என்றும், வளர்க்கப்படுகின்றன என்றும், உணவுக்காக மனிதர்கள் இதை வளர்த்தார்கள் என்றும் கருதப்பட்டு வந்தது.  இந்த கருத்திற்கு எவ்வித ஆவணங்களும் இல்லாமலிருந்தது.

எக்ஸிடர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அறிவியலாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வின் படி, கோழிகளை மனிதர்கள் சுமார் 3500 ஆண்டுகளாக வீட்டு பறவையாக வளர்த்து வருகின்றனர். குறிப்பாக அரிசியை உணவாக உட்கொள்ளும் பழக்கம்கொண்ட மனிதர்கள் கோழிகளை வீட்டு பறவையாக வளர்க்க துவங்கியுள்ளனர்.

கோழிகள் மரங்களில் வாழும் பறவைகளாகவே வாழ்ந்து வந்துள்ளன.  அரிசியை மனிதன் தரையில் விளைவித்த போது, அதை உண்பதற்காக வயல்வெளிகளில் கோழிகள் வந்துள்ளன.  அந்த கோழிகளை பிடித்து மனிதன் வீட்டு பறவையாக மாற்றியுள்ளான்.

முதலில் இந்தியாவின் தென்பகுதி, தென்கிழக்கு ஆசியாவின் புவி விழும்பு கூம்பு (Peninsular) பகுதிகள், ஆகிய பகுதிகளில் மனிதர்கள் கோழியை வீட்டு பறவையாக மாற்றியுள்ளனர்.  துவக்கத்தில் கோழிகள் அழகிற்காக வளர்க்கப்பட்டு வந்துள்ளன.  கடல்வழி விற்பனை தொழிலில் ஈடுபட்டவர்கள், குறிப்பாக கிரேக்கர், உரோமையர் மற்றும் இசுரேலியர்கள் ஆகியோர் இந்த கோழிகளை தத்தமது நாடுகளுக்கு அழகிற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

தமிழர்களை பொறுத்தவரை, சேவல் சண்டை என்பது இன்றளவும் பெருமைமிகு அடையாளமாக கருதப்படுகிறது.  தமிழர்களின் இறைவனான முருகன் சேவலை தனது வெற்றிக் கொடியில் கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட நாட்களில் மரணமடையும் தமிழர்களின் உடலுடன், ஆண் என்றால் சேவலையும், பெண் என்றால் கோழியையும் உடன் புதைப்பது இன்றளவும் வழக்கமாக இருந்து வருகிறது.

இத்தகைய பழக்கங்கள் கிரேக்கர் மற்றும் உரோமையர் ஆகியோருக்கும், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்து வந்துள்ளது.  இந்த உண்மைகள் புதிய அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் தமிழர்களிடமிருந்து இந்த பழக்கங்களை கற்றறிந்துருக்க வேண்டும்.

ஆராய்ச்சியாளர்கள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோழி எலும்பு புதைபடிவங்களை ஆய்விற்கு உட்படுத்தி, அவை எவ்வளவு பழந்தன்மை கொண்டது என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவையெல்லாம் 2500 ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது.

முதன்முதலில் ரோமையர்கள், கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சியை உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.  அவர்களிடமிருந்து பிற மக்களும், முட்டை மற்றும் இறைச்சி உணவிற்காக கோழிகளை வளர்க்கும் பழக்கத்தை பெற்றுள்ளனர் என்கிறது புதிய ஆராய்ச்சி முடிவுகள்.

அதனால்தான் பண்ணை முறையில் கோழிகளை வளர்க்கும் பொழுது, ஐரோப்பியர்களின் அடிப்படை உணவாக விளங்கும் கோதுமை கோழிகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும் என்கிற பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   ஆனால் தமிழர்கள் தொன்றுதொட்டு, அவற்றின் முதல் உணவான  அரிசி மற்றும் தவிடு ஆகியவற்றை,  கோழிகளுக்கு உணவாக கொடுத்து வருகிறார்கள் என்பது புலப்படுகிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: