ஓசூர் பையன், ஓசூர் மாநகராட்சியுடன் ஒரு கலந்துரையாடல்

ஓசூர் பையன், ஓசூர் மாநகராட்சியுடன் ஒரு கலந்துரையாடல்

வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் மீது முழு நம்பிக்கை கொண்ட ஓசூர் பையன், ஓசூர் மாநகராட்சியுடன் ஒரு கலந்துரையாடல் - கற்பனை மட்டுமே.


ஓசூர் பையன்: ஐயா வணக்கம்.  ஓசூர் தளி சாலையை அகலப்படுத்தப்போவதாக சொன்னீர்களே, அகலப்படுத்தினீர்களா? 

ஓசூர் மாநகராட்சி (ஓமா): அதற்கிடையில் தான், ரயில் நிலையம் சாலை பாலத்தின் கீழ் மழை தண்ணீர் தேங்குவதாக சொல்லி, அதற்கு பம்பு அமைக்க சொன்னீர்கள்.


ஓசூர் பையன்: அங்கே பம்பு அமைத்தீர்களா? 

ஓமா:  அதற்கிடையில் தான், கொத்தூர் சாலையை கொத்தி சரி செய்ய சொன்னீர்களே? 


ஓசூர் பையன்: கொத்தூர் சாலையை கொத்திவிட்ட நீங்கள், அதை சரி செய்தீர்களா?

ஓமா:  அதற்கிடையில் தான், உள் வட்டச் சாலையை சரி செய்ய சொன்னீர்களே.


ஓசூர் பையன்: உள் வட்டச் சாலையை சரி செய்தீர்களா?

ஓமா:  அதற்கிடையில் தான், ராயக்கோட்டை சாலையை சரி செய்ய சொன்னீர்களே.


ஓசூர் பையன்: ராயக்கோட்டை சாலையை சரி செய்தீர்களா? 

ஓமா: அதற்கிடையில் தான், ASTC HUDCO 100 அடி சாலையை சரி செய்ய சொன்னீர்களே.


ஓசூர் பையன்: 100 அடி சாலையை சரி செய்தீர்களா? 

ஓமா: அதற்கிடையில் தான், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் செல்லும் பாகலூர் சாலையை சரி செய்ய சொன்னீர்களே.


ஓசூர் பையன்: பாகலூர் சாலையை சரி செய்தீர்களா? 

ஓமா: வாக்களித்த உங்களுக்கு இப்பொழுது பதில் சொல்லிக் கொண்டிருப்பதால், எப்படி இயலும்!


ஓசூர் பையன்: ஆக மொத்தம் எந்த வேலையையும் செய்யவில்லை... உங்கள் இந்த மகத்தான மக்கள் சேவை அடுத்த தேர்தல் வரை தொடர வாழ்த்துக்கள் ஐயா.


இது கற்பனை உரையாடல் மட்டுமே.  யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: