யார் காப்பாளர் என்கிற வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்ததும் உச்ச நீதிமன்றம்.

யார் காப்பாளர் என்கிற வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்ததும் உச்ச நீதிமன்றம்.

ஆகஸ்ட் 28,2024 அன்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் 2.5 வயது குழந்தையை தனது தந்தையிடம் பாதுகாப்பில் வைக்க மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக, தாய்வழி அத்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தனது தீர்ப்பை கூறியது.

நீதியரசர் அபய் எஸ் ஓகா மற்றும் நீதியரசர் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஆணையை "முற்றிலும் தவறான அணுகுமுறை" என்று கூறியது.

நீதியரசர் ஓகா, "உயர் நீதிமன்றம் குழந்தையை மாற்றக்கூடிய, அசையும் சொத்தாக கருதி உள்ளது என அறியும் பொழுது எங்கள் நீதித்துறை மனசாட்சி அதிர்ச்சியடைகிறது. அதுதான் இடர்பாடு. ஒரு எளிய வழிமுறை இருப்பதாக உயர் நீதிமன்றம் கூறுகிறது.
 அதாவது தந்தை ஒரு இயற்கையான பாதுகாவலர், எனவே குழந்தை தந்தையிடம் திரும்பிச் செல்ல வேண்டும்.

அந்த கருத்தின் மூலம், உயர்நீதிமன்றம் எடுத்த இந்த கருத்தை நாங்கள் உறுதிப்படுத்தியிருந்தால், ஒவ்வொரு காவல் மனுவும், குழந்தைகளைக் கையாளும் ஒவ்வொரு ஆட்கொணர்வு மனுவும் ஒரு பத்தியில் முடிவு செய்யப்படலாம்".

வினவலின் போது, பாதுகாப்பாளர் வழக்குகளில், பாதுகாப்பில் வைக்கக் கோரும் தரப்பினரின் சட்ட உரிமைகளை விட, குழந்தையின் நலனே அடிப்படை ஆனது என்று உச்ச நீதிமன்ற அமர்வு மீண்டும் வலியுறுத்தியது.

மேலும், "ஒரு பாதுகாப்பாளர் குறித்து நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட வழக்கில் இயற்கையான பெற்றோருக்கு காவலை வழங்க மறுக்கலாம். இது அனைத்தும்  குழந்தையின் நலனைப் பொறுத்தது. இரு தரப்பினரின் சட்ட உரிமைகளின் அடிப்படையில் மட்டுமே பாதுகாப்பாளர் குறித்து நீதிமன்றம் குழந்தையின் பாதுகாப்பு உரிமையை வழங்கும் என்பது வழக்கத்திற்கு உரியது அல்ல".

இந்த வழக்கில், தனது தாயின் வரதட்சணை மரணத்திற்காக தந்தை கைது செய்யப்பட்டதிலிருந்து குழந்தை தனது தாய்வழி அத்தையுடன் வாழ்ந்து வருகிறது. தந்தை விடுவிக்கப்பட்ட பிறகு, குழந்தையின் தந்தை மற்றும் தந்தைவழி தாத்தா - பாட்டி குழந்தையை தங்களது பாதுகாப்பில் வைக்கக் கோரி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். "குழந்தை சட்டவிரோத காவலில் இருப்பதாகவும், தந்தை இயற்கையான பாதுகாவலராக இருப்பதால், 15 நாட்களுக்குள் குழந்தையின் காவலை தந்தை மற்றும் தந்தைவழி தாத்தா பாட்டிகளிடம் ஒப்படைக்குமாறு தாய்வழி அத்தைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது".

குழந்தையின் தாய்வழி அத்தை தற்போதைய மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்தார். உச்ச நீதிமன்றம், "இரண்டு ஆண்டுகளாக குழந்தை தாய்வழி அத்தையுடன் உள்ளது, நாங்கள் குழந்தையின் பாதுகாப்பை இப்படி தொந்தரவு செய்ய முடியாது. அது குழந்தைக்கு எதிர்மறை விளைவுகளை இழைக்கும்" என்று கூறினார்.

மேலும், சட்ட சேவைகள் ஆணையத்தின் அலுவலகத்தில் (in the presence of the Secretary) பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தந்தையால் குழந்தையை சந்திக்கக்கூடிய இடைக்கால ஏற்பாட்டை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.

மேலும், குழந்தை படிப்படியாக தனது தந்தை மற்றும் தந்தைவழி தாத்தா பாட்டிகளுடன் நெருக்கமாக இருக்க உதவ, ஒரு குழந்தை உளவியலாளரை ஈடுபடுத்த வேண்டும் என்று நீதிமன்றம் முன்மொழிந்தது.

இது தவிர, தந்தை பின்னர் குழந்தையின் பாதுகாப்பாளராக இருக்க மனு தாக்கல் செய்தால், மேற்கூறிய சந்திப்புக்கு அவர் அளித்த பதிலின் அடிப்படையில் குழந்தையை அணுகுவதை உயர்த்துவது குறித்து குடும்ப நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: