மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது தீர்ப்பில், ஒரு ஒப்பந்த ஊழியர் நிரந்தர பணி உரிமை கோர முடியாது என்றும், பணிக்கான ஒப்பந்தம் முடிந்தும், அவர் தொடர்ந்து பணியாற்றினார் என்பதற்காக அவர் முறையாக பணியமர்த்தப்பட்டவர்கள் போல் நிரந்தர பணி உரிமை கோர இயலாது என்று கூறியது.
பொறுப்பு தலைமை நீதியரசர் சஞ்சீவ் சச்சதேவா மற்றும் நீதியரசர் வினய் சரஃப் ஆகியோர் அடங்கிய ஒரு பிரிவு பெஞ்ச் இந்த கருத்தை மேற்கொண்டது.
மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட தரவு உள்ளீட்டாளர்கள் (Data Entry Operator) சிலர் மாநிலத்தின், திட்டங்கள்- பொருளாதாரம் மற்றும் புள்ளித்தரவுகள் துறை ஆணையாளரின் ஆகஸ்ட் 2018 ஆணையை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் ஒற்றை நீதியரசர் பெஞ்ச், இவர்களை மீண்டும் பணியை அமர்த்த கட்டளையிட்டது. அதை எதிர்த்து அரசின் தரப்பில் தாக்கல் செய்த ரிட் மனுவை அனுமதித்தது.
டிவிஷன் பெஞ்ச் தனது ஆணையில், "ஒப்பந்த ஊழியர் முறைப்படுத்தல் அல்லது நிரந்தர பணிநிலையை கோர முடியாது என்பது அடிப்படையான சட்டமாகும். மேலும் அவரது பணி ஒப்பந்தம் செய்யப்பட்ட நாட்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒப்பந்த பணியமர்த்தல் என்றால், பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த நாட்களுடன் ஒப்பந்தம் முடிவடைகிறது மற்றும் ஒப்பந்த ஊழியர் தனது ஒப்பந்தம்/ பணியமர்த்தப்பட்ட நாட்கள் கடந்தும் பணியாற்றினார் என்பதற்காக நிரந்தரமாக பணிபுரிய உரிமை கோர முடியாது.
ஒரு ஒப்பந்த ஊழியர் தனது பணியமர்த்தப்பட்ட நாட்களுக்கு அப்பால் தொடர்ந்ததால், அவர் வழக்கமான பணியாமர்த்தப்படும் பணியாளர் போல உள்வாங்கப்படவோ அல்லது அத்தகைய தொடர்ச்சியின் வலிமையின் அடிப்படையில் நிரந்தரமாக்கப்படவோ உரிமை இல்லை. தரவு உள்ளீட்டாளர்கள் (Data Entry Operator) பதவி இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே பணியமர்த்தல் செய்யப்பட்டதால், தரவு உள்ளீட்டாளரின் நிரந்தர பதவியை உருவாக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை என்பது மாநிலத்தின் நோக்கத்தில் மிகவும் தெளிவாக இருந்தது.
"எந்தவொரு விசாரணை வாய்ப்பையும் வழங்காமல்" ஆபரேட்டர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர் என்று ஒற்றை நீதிபதி பெஞ்ச் "தவறாக" தீர்ப்பளித்ததாக பெஞ்ச் மேலும் கூறியது. அதே நேரத்தில் தரவு உள்ளீட்டாளர்கள் ஒப்பந்தமானது ஆகஸ்ட் 31,2017 வரை தொடர்ந்தது என்பது பதிவுகளில் இருந்து தெளிவாகிறது. அதன்பிறகு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை மற்றும் " நிறுத்துதல் அல்லது பணிநீக்க ஆணை வெளியிடப்படவில்லை".
"தரவு உள்ளீட்டாளர்களின் ஒப்பந்தத்தைத் தொடராததற்காக மாநில அரசு எடுத்த பணிநீக்க முடிவு, கற்றறிந்த ரிட் நீதிமன்றத்தால் தவறாக கருதப்பட்டது, எனவே, கற்றறிந்த ரிட் நீதிமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஆணையால் சட்டத்தில் நிலைநிறுத்த முடியாது. இதன் விளைவாக, இந்த நீதிமன்றத்தின் கருத்தில், W.P எண் 21766/2018 02.02.2023 இல் கற்றறிந்த ரிட் நீதிமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தடை உத்தரவு ஒதுக்கி வைக்கப்படுவதற்கு தகுதியானது மற்றும் இதன் மூலம் ஒதுக்கி வைக்கப்பட்டு, மேல்முறையீட்டாளர்/மாநிலத்தால் கோரப்பட்ட மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது. பதிலளித்தவர்கள்/மனுதாரர்கள் முன்வைத்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று பெஞ்ச் மேலும் கூறியது.
வழக்கின் பின்னணி
மாநில அரசு, ஆகஸ்ட் 9,2018 தேதியிட்ட ஆணையில், பதிலளித்தவர்கள்/மனுதாரர்கள் உட்பட 21 தரவு உள்ளீட்டாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்று முடிவு செய்தபோது இந்த வழக்கு எழுந்தது. இந்த தரவு உள்ளீட்டாளர்கள் 2010 ஆம் ஆண்டில் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இது அவ்வப்போது 2017 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், செப்டம்பர் 1,2017 அன்று, ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2018 இல் அரசாணை அவர்களின் பணிநீக்கத்தை முறைப்படுத்தியது.
தரவு உள்ளீட்டாளர்கள் தங்கள் வேலையை முறைப்படுத்தக் கோரியும் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மேலும் அவர்கள் பணிநீக்கம் செய்வது இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று ஒற்றை அமர்வு நீதியரசர் அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். பணிநீக்க ஆணையை ரத்து செய்து, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஆணையிட்டார். ஒற்றை நீதி அரசர் அமர்வு அவர்களின் ஊதியம் குறித்த கேள்வியை முடிவு செய்யுமாறு அரசுக்கு ஆணையிட்டது.
உள்ளடக்கங்கள்
மத்தியப் பிரதேச மாநிலத்திற்கான வழக்கறிஞர் துணை அட்வகேட் ஜெனரல், ஒற்றை பெஞ்சின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். தரவு உள்ளீட்டாளர்கள் ஒப்பந்த ஊழியர்கள் என்றும், அவர்கள் தங்கள் ஒப்பந்த நாட்களுக்கு அப்பால் முறைப்படுத்தவோ அல்லது தொடரவோ உரிமை கொடுக்கப்படவில்லை என்றும் அரசு எடுத்துக் கூறியது. சிவில் போஸ்ட் விதிகள், 2017 க்கு மத்தியப் பிரதேச ஒப்பந்த பணி அமர்த்தலை ஒற்றை பெஞ்ச் தவறாகப் பயன்படுத்தியதாகவும், வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாகப் புரிந்து கொண்டதாகவும் அரசு எடுத்து வைத்தது. திருலேகா வித்யார்த்தி vs ஸ்டேட் ஆஃப் U.P. 1991, இது ஒப்பந்தம் போடப்பட்ட நாட்களில் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பானது.
மேலும், நவம்பர் 2017 அரசின் எல்லா துறைகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஆணையின்படி, தரவு உள்ளிட்டாளர் பதவி, ஒருபோதும் அரசின் எந்த துறைக்கும் நிலையான பதவியாக உருவாக்கப்படவில்லை என்றும், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர் என்றும் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தின் 2017 ஆம் ஆண்டின் Contractual Appointment to Civil Post Rules, 2017 இந்த ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட தரவு உள்ளீட்டாளர்களுக்கு பொருந்தாது என்றும், ஏனெனில் இவர்கள் பணியமர்த்தப்பட்டது 2010 ஆம் ஆண்டில் என்று எடுத்துரைக்கப்பட்டது.
2018 மே 29 நாளிட்ட அமைச்சரவை முடிவைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து பலமுறை பணி நீட்டிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, பணி முறைப்படுத்தல் கோர உரிமை உண்டு என்று நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மனுதாரர்களின் எந்த கருத்தையும் எடுத்துரைக்க எந்த வாய்ப்பையும் வழங்காமல் பணி வாய்ப்பை நிறுத்த முடியாது என்றும், 09.08.2018 நாளிட்ட அரசின் ஆணை, இயற்கை நீதிகளுக்கு எதிராக உள்ளது என்றும், எனவே ஒற்றைய அமர்வு நீதிமன்றத்தால் சரியாக கருதப்பட்டு அந்த அரசின் ஆணை நிறுத்தி வைக்கப்பட்டது என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
கண்டுபிடிப்புகள்
"எந்த துறையிலும் வழக்கமான பணியாக இந்த தரவு உள்ளீட்டாளர் பணி இருந்திருக்கவில்லை என்றும், தரவு உள்ளிட்டாளர்களை பணி அமர்த்தும் நோக்கத்திற்காக மட்டுமே இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றும் இரண்டு நீதியரசர்கள் கொண்ட பிரிவு அமர்வு கூறியது.
உயர் நீதிமன்றம், தரவு உள்ளிட்டாளர்கள் முதன் முதலில் "இரண்டு ஆண்டு காலத்திற்கு இடைக்கால அடிப்படையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்" ஒப்பந்தக் காலத்தை நீட்டிப்பது மட்டுமே வேலைவாய்ப்பு நிலைமைகளை மாற்றாது என்றும் சுட்டிக்காட்டியது.
தரவு உள்ளீட்டாளர்கள் ஒப்பந்தம் தொடர்ந்த நாட்களில் பணி நிறுத்தம் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டதாக வழக்கு இல்லை என்றும், எனவே, மனுதாரர்களின் பணியை தொடராததற்காக எந்த வினவலையும், கருத்து கூறும் வாய்ப்பையும் கொடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் நடத்த வேண்டியதில்லை என்றும் அமர்வு கூறியது.
Case Title: State of Madhya Pradesh & Ors. Versus Rajeev Singh & Ors.
Citation: WRIT APPEAL No. 607 of 2023