சில பழங்குடி இனத்தவருடைய இருக்கும் பழக்கமான, "நாட்டா திருமணம்", அதாவது, ஏற்கனவே கணவன்/ மனைவி உயிருடன் இருக்கும் பொழுது, தனது திருமண இணையைப் பிரிந்து சமூகம் ஏற்றுக் கொண்டபடி வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்வது, என அத்தகைய திருமண முறையில் வாழ்வதாக கருதப்பட்டாலும், திருமணச் சட்டங்களின்படி தேவைப்படும் திருமண சடங்குகளை பின்பற்றுவதன் மூலமோ அல்லது நாட்டா திருமணத்திற்கான அடிப்படை தேவையான சடங்குகளைப் பின்பற்றுவதன் மூலமோ அத்தகைய திருமணம் நடைபெற்றதாக சான்று இருக்கும் வரை, ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை இரட்டை திருமணமாக கருத இயலாது.
மற்றொரு பெண்ணுடன் இரண்டாவது திருமணத்தை நடத்தியதாகக் கூறப்படுவது தொடர்பான தண்டனைச் சட்டம், 1860 (ஐபிசி) இன் பிரிவு 494 இன் கீழ் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றவியல் அமர்வு நீதியரசர் மெர்ட்டா மற்றும் சிறப்பு உரிமையியல் நீதியரசர் ஆகியோரின் தீர்ப்பை, தள்ளுபடி செய்யக் கோரி ஒரு குற்றவியல் இதரப்பிரிவு மனுவில் (criminal miscellaneous petition) மனுதாரர் கோரி இருந்தார்.
இந்த வழக்கு ஒற்றை அமர்வு நீதியரசர் குல்தீப் மாத்தூர், ஜே. முன் வந்தது. நீதியரசர் தமது தீர்ப்பில், செல்லுபடியாகும் திருமணத்திற்கு சான்று இல்லாமல் ஐபிசி பிரிவு 494 இன் கீழ் வெறும் சேர்ந்து வாழ்தல் என்பது குற்றமாக கருதப்படாது என்று தீர்ப்பு கூறினார். ஐபிசி பிரிவு 494 இன் கீழ் மனுதாரருக்கு எதிராக நிலுவையில் உள்ள சர்ச்சைக்குரிய ஆணைகளை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் அடிப்படை என்னவென்றால், மனுதாரர்-கணவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (சிஆர்பிசி) பிரிவு 482 இன் கீழ் 05-01-2019 மற்றும் 25-07-2018 நாளிட்ட ஆணைகளை தள்ளுபடி செய்யக் கோரி ஒரு குற்றவியல் இதர மனுவை தாக்கல் செய்தார்.
பிரதிவாதி-மனைவி மனுதாரர் மீது ஐபிசியின் 498-ஏ, 406,323,494 மற்றும் 497 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் செய்ததாக புகார் அளித்தார். மனுதாரர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் ஐபிசி பிரிவு 494 இன் கீழ் இரட்டை திருமணம் செய்ததாகவும் குறிப்பாக குற்றம் சாட்டினார். இந்த புகார் சிறப்பு உரிமையியல் அமர்வு நீதியரசர் டெகனா மற்றும் குற்றவியல் அமர்வு நீதியரசர் ஆணைகள் உட்பட குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது.
மனுதாரர் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடுத்தார். அடிப்படை தேவையான மத சடங்குகளின்படி மற்றொரு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடைபெறவில்லை என்று எடுத்துரைத்தார். குற்றம் சாட்டப்பட்ட நிகழ்வுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட்ட பிரதிவாதியின் புகாரில் பொருள் இல்லை என்றும் துன்புறுத்தும் நோக்கம் கொண்டது என்றும் மனுதாரர் எடுத்துரைத்தார்.
இருப்பினும், காவல்துறை வினவலில் மனுதாரர் இரட்டை திருமணம் செய்த குற்றவாளி என்று கண்டறியப்பட்டதாக மனைவி எடுத்துரைத்தார். இரண்டாவது திருமணத்தின் செல்லுபடியாகும் தன்மை நீதிமன்றத்திற்கு ஒரு உண்மை கேள்வி என்று எடுத்துரைக்கப்பட்டது. ஒரு வழக்கமான நாட்டா திருமணம் கூட ஐபிசி பிரிவு 494 இன் கீழ் குற்றத்தைக் குறிக்கிறது என்று மனைவி மேலும் வலியுறுத்தினார்.
CrPC பிரிவு 200 இன் கீழ் புகார் மற்றும் பிரதிவாதியின் அறிக்கைகள் செல்லுபடியாக தக்க இரண்டாவது திருமணத்தை நடத்தவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. புகாரைத் தாக்கல் செய்வதில் நீண்ட இடைவெளி (20 ஆண்டுகள்) இருப்பது உடனடி குறைகள் இல்லாததைக் குறிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியது. மனுதாரர் இந்து சடங்குகளின்படி ராஜு தேவியை மணந்தார் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஒரு நாட்டா திருமணம் நடத்தப்பட்டாலும், அதற்கான அடிப்படை சடங்குகள் பின்பற்றப்பட்டன என்பதற்கு எந்த ச் சான்றும் இல்லை என்று நீதிமன்றம் மேலும் கூறியது. ஐபிசி பிரிவு 494 இன் கீழ் ஒரு குற்றத்திற்கு, இரண்டாவது திருமணம் சட்ட மற்றும் மத சடங்குகளின்படி நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. சட்டப்படி சடங்கு நடைபெற்றதற்கான இல்லாமல் வெறும் சேர்ந்து வாழ்தல் என்பது ஐபிசி பிரிவு 494 இன் கீழ் ஒரு குற்றமாக இருக்காது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
[Bhanwar Lal vs State of Rajasthan, Rajasthan High Court order dated 07-05-2024]