இந்தியாவில் திருமணம் முறிவிற்கான நீதிமன்ற ஆட்சி எல்லை வரம்பு எவ்வாறு முடிவெடுக்கப்படுகிறது?

இந்தியாவில் திருமணம் முறிவிற்கான நீதிமன்ற ஆட்சி எல்லை வரம்பு எவ்வாறு முடிவெடுக்கப்படுகிறது?

திருமண முறிவு தொடர்பான வழக்குகளை, எந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இயலும் என்பதற்கு, ஒவ்வொருவரும் சார்ந்துள்ள மதம் மற்றும் இனம் அடிப்படையில் சட்டங்கள் சில அடிப்படை நடைமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது.

பொதுவாக, தம்பதியர் திருமணம் செய்து கொண்ட ஊர், இருவரும் சேர்ந்து வாழ்ந்த ஊர், இருவரும் பிரிந்த பின் இப்போது வாழும் ஊர் என இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு வழக்கு தொடுப்பதற்கான நீதிமன்ற எல்லை முடிவெடுக்கப்படுகிறது.

இந்து திருமண சட்டம் 1955:

இந்து திருமண சட்டத்தை பொருத்தவரை, இருவரும் திருமணம் செய்து கொண்ட ஊர் அல்லது இருவரும் சேர்ந்து வாழ்ந்த ஊர் அல்லது எதிர்தரப்பினர் வாழும் ஊர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் எல்லை முடிவெடுக்கப்படுகிறது.

சிறப்பு திருமண சட்டம் 1954:

சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்தவர்கள், திருமணம் நடைபெற்ற மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் திருமண முறிவிற்கான வழக்கை தொடுக்கலாம்.  அல்லது, இருவரும் கடைசியாக சேர்ந்து வாழ்ந்த ஊரில் வழக்கை தாக்கல் செய்யலாம்.  அல்லது, எந்த ஊரில் வாழும் பொழுது வழக்கு தொடுப்பதற்கான முயற்சி முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டதோ அந்த ஊரில் வழக்கு தொடுக்கலாம்.

கிறிஸ்தவர் திருமண சட்டம் 1872:

கிறிஸ்தவர் திருமண சட்டத்தை பொருத்தவரை, திருமண முறிவிற்கான வழக்கு தொடுக்கும் நீதிமன்றம், திருமணம் நடைபெற்ற மாவட்டத்தில் அல்லது தம்பதியர் கடைசியாக சேர்ந்து வாழ்ந்த மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லையில் அமைந்திருக்க வேண்டும்.

இஸ்லாமியர் தனிநபர் சட்டம்:

இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின் கீழ், மனைவி எந்த ஊரில் வாழ்கிறாரோ அந்த ஊரின் மாவட்டத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.  சில சூழல்களில், கணவர் வாழும் ஊரிலும் வழக்கை தாக்கல் செய்யலாம்.  அல்லது, திருமணம் நடைபெற்ற ஊரின் கீழ் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

பொதுவாக ஒவ்வொரு மதத்திற்கு என்று திருமண முறிவு வழக்கு தாக்கல் செய்வதற்கான நீதிமன்றங்களின் எல்லைகள் வரையறுத்து கூறப்பட்டிருந்தாலும், எல்லைகளை வரையறுத்து வழக்கு தாக்கல் செய்வது என்பது ஏராளமான சிக்கல்கள் நிறைந்ததாகும்.

ஒவ்வொரு சூழலிலும், சூழலுக்கு ஏற்ப, சட்டங்கள் அவரவர் பார்வையில் வெவ்வேறு விதமான வழக்குகளாக முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்ற எல்லை குறித்து முடிவெடுக்கப்படுவதால், சூழலை பொறுத்து நீதிமன்ற எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: