முதல் கணவருக்கு பிறந்த மகனை, இரண்டாம் கணவருடன் சேர்ந்து, முதல் கணவரின் அனுமதி இல்லாமல் தத்தெடுக்க அனுமதி வேண்டும் என பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.
திருமண முறிவு பெற்றபிறகு, மறுதிருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், தனது மகனை, மகனின் தந்தையின் அனுமதியில்லாமல் சட்டப்படி தத்தெடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்.
இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் படி, குழந்தையின் தந்தை அனுமதிபெற்றே தத்தெடுக்க முடியும்.
மனுதாரர் திவ்ய ஜோதி சிங், வழக்குரைஞர். இவர், உச்ச நீதிமன்றத்தில் தனது மனு பற்றிய விளக்கத் அளித்துள்ளார். அதில், திவ்யா மற்றும் அவரது முன்னாள் கணவரும் வழக்குரைஞர்கள். இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 2015ஆம் ஆண்டு திவ்யா கருவுற்று இருந்தபோது, அவரது கணவர் வேறொரு பெண்ணோடு வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக இவர் குற்றம் சாட்டுகிறார்.
திவ்யாவின் கூற்றுப்படி, கணவர் கைவிட்டு விட்டு சென்ற பிறகு மகன் பிறந்துள்ளார். மகனை ஒரு முறை கூட, மகனின் தந்தை (முதல் கணவர்) வந்து பார்க்கவில்லை. பின்பு 2016ஆம் ஆண்டு திவ்யாவுக்கு திருமணம் முறிவு வழங்கப்பட்டுள்ளது. திவ்யாவின் முதல் கணவருக்கு மறுதிருமணம் நடந்து குழந்தையும் பிறந்திருக்கிறது.
2020ஆம் ஆண்டு திவ்யா மறுதிருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து முன்னாள் கணவரால், திவ்யாவுக்கு தொடர்ந்து இடர்பாடுகள் கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார். இதனை எதிர்கொள்ள, தனது மகனை சட்டப்படி, தான் மற்றும் தனது இப்போதைய கணவரும் சேர்ந்து தத்தெடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
அதில், குழந்தை பிறந்தது முதல், அதனைப் பார்க்கக் கூட வராத, தந்தையின் அனுமதி இல்லாமல், தனது மகனை தத்தெடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், உச்ச நீதிமன்றம், சட்டப்படி, தந்தையின் அனுமதியில்லாமல் எவ்வாறு தத்தெடுகக் அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, தில்லி காவல்துறை இது குறித்து முன்னாள் கணவருக்கு ஓலை அனுப்பவும், இரண்டு கிழமைகளுக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.