மனரீதியாக கொடுமை நிகழ்த்துவதற்கு கணவன் மனைவியாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்கு இல்லை ... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மனரீதியாக கொடுமை நிகழ்த்துவதற்கு கணவன் மனைவியாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்கு இல்லை ... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மனரீதியாக தமக்கு மனைவி கொடுமை செய்ததாக கணவன் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, திருமணம் முறிவு பெற்ற நிலையில், அப்படியாக எந்த கொடுமையையும் தாம் நிகழ்த்தவில்லை என மனைவி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
CIVIL APPEAL NOS. 8927-8928 OF 2012 "Arising out of S.L.P. (Civil) Nos. 37449-37450 of 2012 ( CC.5877-5878 of 2012)"
கணவர் இசை மீது பற்றும் மரியாதையும் கொண்டவராக, அதையே தனது வாழ்நாளாக அமைத்து, தந்தையை குருவாக கொண்டு வாழ்பவர்.  மனைவி, மூத்த IAS அலுவலரின் மகள்.  இருவரும் ஆந்திராவை தாயகமாகக் கொண்டவர்கள்.  இருவருக்குமான திருமணம் இந்து முறைப்படி திருப்பதியில் வைத்து  19.11.1994 நடத்தப்பட்டுள்ளது.

திருமணத்திற்குப் பின் இருவரும் கணவன் மனைவியாக சென்னை வடபழனியில் குடியிருந்துள்ளனர்.  இவர்களுக்கு ஆண் குழந்தை 30 மே 1995 ல் ஐதராபாத்தில் பிறந்துள்ளது.

தாய் வீட்டில் இருந்து 4.10.1995 அன்று கணவர் வீட்டிற்கு மனைவி வந்துள்ளார்.  தனது வீட்டிற்கு குழந்தையுடன் வந்த மனைவி, தாம் தனது தந்தையிடம் இசை பயில்வதை விரும்பாமல் மனைவி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கணவர் குற்றம் சாட்டுகிறார்.  

பாத்திரங்களை தூக்கி அடிப்பது, வாய் வார்த்தைகளால் வஞ்சிப்பது, பொதுவெளியில் தம்மை தூற்றுவது, தமது இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவிப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து மனைவி ஈடுபட்டு வந்ததாக கணவர் குற்றம் சாட்டுகிறார்.

மனைவி அவரது தந்தைக்கு தம்மை வஞ்சித்து கடிதம் எழுதியதாக, கடிதத்தின் நகல் எனக் கூறி Photocopy ஒன்றையும் நீதிமன்றத்தில் ஆவணமாக கணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

மனைவி தரப்பில், சேர்ந்து வாழ்வதற்கு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.

குடும்ப நீதிமன்றம்,  வழக்கை முழுமையாக வினவி, கணவருக்கு மனைவியால் மனரீதியான கொடுமை நிகழ்ந்தது என ஏற்றுக்கொண்டு, கணவருக்கு மனைவியிடம் இருந்து திருமணம் முறிவு வழங்கியது.  கணவர் தரப்பில், மனைவி மற்றும் மகன் என இருவருக்கும் தலா ரூபாய் 5 லட்சம் வீதம் ஒரே தொகையாக வாழ்வதற்கான பணம் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

இதை ஏற்றுக் கொள்ளாத மனைவி தரப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை முழுமையாக வினவி, கணவருக்கு மனைவியால் மனரீதியான கொடுமை நடந்தது என்பதை உறுதி செய்து.  மேலும், குடும்ப நீதிமன்றம் வழங்கிய திருமண முறிவு தீர்ப்பை உறுதி செய்தது.  வாழ்க்கை உதவி தொகையாக, குடும்ப நீதிமன்றம் ஆணையிட்ட ரூபாய் பத்து லட்சத்திற்கும் மேலாக, குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்த நாள் முதல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் வரை மாதம் ஒன்றிற்கு ரூபாய் 12, 500 வீதம் சேர்த்து செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத மனைவி தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது.

வழக்கை விணவிய உச்சநீதிமன்றம், கணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தின் உண்மை தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியது.  உண்மையான கடிதம் இல்லாத நிலையில், எழுதப்பட்டதாக சொல்லப்படும் கடிதத்தின் நகலை ஒரு ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று "Ashok Dulichand v. Madahavlal Dube, wherein it has been held that according to clause (a) of Section 65 of the Indian Evidence Act, secondary evidence may be given of the existence, condition or contents of a document when the original is shown or appears to be in the possession or power of the person against whom the document is sought to be proved, or of any person out of reach of, or not subject to, the process of the court, or of any person legally bound to produce it, and when, after the notice mentioned in Section 66, such person does not produce it." என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கடித நகலை வழக்கு ஆவணத்திலிருந்து நீக்கியது.

உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில்,

மனைவி தரப்பில், 13 ஆண்டுகளாக பிரிந்து வாழும் நிலையில், சேர்ந்து வாழ்வதற்கு முயற்சி செய்ததாக எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை.  அதே வேளையில், கணவர் தனது தரப்பில் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆவணங்களையும், மனைவி மனரீதியாக தம்மை கொடுமைப்படுத்தினார் என்பதற்கான ஆவணங்களையும் எவ்வித ஐயப்பாட்டிற்கும் இடம் இன்றி நீதிமன்றத்தின் முன் எடுத்து வைத்துள்ளார்.

இருக்கும் ஆவணங்களின் மூலம், மனைவி கணவரை மனரீதியாக கொடுமை செய்தது உறுதி செய்யப்படுகிறது.  மன ரீதியான கொடுமை என்கிற அடிப்படையில் கணவர் தாக்கல் செய்த திருமண முறிவு கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  குடும்ப நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உறுதி செய்த திருமணம் முடிவு தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

கணவர் தாம் இப்போது பொருளாதார ரீதியாக சிறந்த நிலைக்கு வந்து விட்டதாகவும், இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இசை கச்சேரி நடத்தி புகழுடன் வலம் வருவதாக நீதிமன்றத்தில் எடுத்துக் கூறுகிறார்.  ஆகவே, குடும்பநீதிமன்றம் வழங்கிய வாழ்வதற்கான ஒரு முறை உதவித்தொகை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மனைவி மற்றும் மகன் வாழ்வதற்கு கணவர் ஹைதராபாத்தில் Flat ஒன்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்தை முன்மொழிந்தது.  ஏற்றுக் கொண்ட கணவர், ஹைதராபாத்தில் Flat வாங்கி கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.  இதற்கிடையே மனைவி தரப்பில், கணவரால் வாங்கித் தர இயலாத தொகைக்கு Flat அடையாளம் காட்டப்பட்டது.  பொருளாதார ரீதியாக அத்தகைய தொகையை தம்மால் செயல்படுத்த முடியாது என கணவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்டது.

கணவரின் நிலையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், ரூபாய் 50 லட்சத்தை மனைவிக்கு கணவர் செலுத்த வேண்டும் எனவும், அதில் ரூபாய் 20 லட்சம் மகனின் பெயரில் பெருமளவு வட்டி பெறும் வங்கி வைப்பாக வைக்கப்பட வேண்டும் எனவும், வழக்கின் இடைப்பட்ட நாட்களில் கொடுக்கப்பட்ட எந்த தொகையும் இதில் கணக்கில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கின் தீர்ப்பு மூலம், உச்ச நீதிமன்றம் "கணவன் மனைவி சேர்ந்து வாழாமல் இருந்தாலும் மன ரீதியான கொடுமையை ஒரு தரப்பினர் மேற்கொள்ள முடியும்" என தெளிவுபடுத்தியது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: