வழிபாட்டு நிகழ்வுகளிலும், தியானம் மற்றும் கொண்டாட்டங்களின் போது ஊதுபத்தி மற்றும் கப் சாம்பிராணி கொளுத்தும் பழக்கம் பல்வேறு நாட்டு இனங்களின் பண்பாடுகளில் கலந்துள்ளது.
பொதுவாக ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி கொளுத்தும் போது வெளிவரும் புகையில், கரிமம், Sulphur, Nitrogen Oxide, Formaldehyde, மற்றும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன் ஆவியான கலவைகள் கலந்துள்ளன.
பொதுவாக, ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி கொளுத்துபவர்கள், வெளிவரும் புகையினால் ஏற்படும் ஒவ்வாமை குறித்து புரிந்து கொள்வதில்லை.
பல ஆய்வுகளின் படி, இந்த புகைகள், சிகரெட் புகைகளை காட்டிலும் நான்கரை மடங்கு கூடுதலான காற்றில் மிதக்கும் துகள்களை பரப்புகின்றன.
ஏற்கனவே ஒவ்வாமை, மூச்சுத் திணறல் அல்லது நோய் எதிர்ப்பு குறைபாடுகள் உள்ள நபர்கள், இத்தகைய புகைகளை நுகர்வதற்கு நேர்ந்தால், அவர்களுக்கு கடுமையான பாதிப்பை இது ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.
ஊதுபத்தி மற்றும் கப் சாம்பிராணி புகைகளை நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து நுகர்வது, புற்றுநோயை கூட ஏற்படுத்தலாம் என்கிற அதிர்ச்சி தகவல், ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள், இவற்றை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும், புகை மூட்டத்தை முகராமல் கவனித்துக் கொள்வது அவர்களது உடல் நிலைக்கு சிறந்ததாக அமையும்.
ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி ஆகியவை, வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து, புனிதம் மற்றும் வழிபாடு முறைகளில் ஒன்றாக திகழ்கிறது. அவற்றை, சமூகங்களின் பயன்பாட்டில் இருந்து நீக்குவது இயலாத ஒன்று.
ஆகவே, ஒவ்வாமை மற்றும் பாதிப்பு உள்ளவர்கள், இதற்கு மாற்றாக, மின் பயன்பாட்டில் செயல்படும் வாசனை ஆவி கருவிகளையும், புகை தோன்றுவது போன்ற மாயை ஏற்படுத்தும் விலக்கு ஒலிகளையும் ஆன்மீக மற்றும் மன அமைதி தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என அறிவியலாளர்களும் மருத்துவ வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.