இந்தியாவில் குழந்தை திருமணம் சட்டத்திற்கு புறம்பானதா?

இந்தியாவில் குழந்தை திருமணம் சட்டத்திற்கு புறம்பானதா?

குழந்தைத் திருமணங்கள் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல, ஆனால் செல்லாதவை மட்டுமே!

இந்தியாவில், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கும், 21 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் (Prohibition of Child Marriage Act 2006 -PCMA) படி, மணமகள் அல்லது மணமகன் அல்லது இருவரும் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கும் திருமணங்கள் செல்லாதவை.

அதாவது, திருமணத்திற்கு உட்பட்ட இரு சிறு வயதுடையவரில் ஒருவர், தாம் இந்த திருமணத்தில் உடன்படவில்லை என நீதிமன்றத்தில் விண்ணப்பித்தால், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருமணம் ரத்து செய்யப்படலாம் அல்லது செல்லாது என்று அறிவிக்கப்படலாம்.

யாரேனும் ஒரு 18 வயதிற்கு உட்பட்ட வரை வஞ்சகத்தின் மூலம் கவர்ந்திழுக்கும் சூழ்நிலைகளில் அல்லது அவர்களை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினால் அல்லது திருமணத்தின் நோக்கத்திற்காக அவர்களை விற்றால், அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று கருதப்படும். இது தண்டனைக்குரிய குற்றமாகவும் மாறும்.

சில தனிப்பட்ட சட்டங்களின் கீழ் (எடுத்துக்காட்டாக இஸ்லாமிய தனிநபர் சட்டம்) குழந்தைத் திருமணங்கள் அனுமதிக்கப்படும் அதே வேளையில், உச்ச நீதிமன்றமானது,  Independent Thought vs Union of India (2017) வழக்கில், தனிப்பட்ட சட்டங்கள் PCMA சட்டத்தை மீறுவதாகவும், சிறார்களை உள்ளடக்கிய எந்தவொரு திருமணமும் சட்டத்திற்கு புறம்பானது மற்றும் சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடியது என்றும் குறிப்பிட்டது.  குழந்தை திருமண தடை சட்ட செயல்பாட்டுக்கு தனிநபர் சட்டங்கள் தடையாக இருக்க முடியாது” உச்சநீதிமன்றம்

இந்தியாவில் குழந்தை திருமணத்திற்கான தண்டனை என்ன?


PCMA வின் கீழ் சட்டத்திற்குப் புறம்பான சில செயல்கள் உள்ளன. குழந்தை திருமணம் தொடர்பான பின்வரும் செயல்களுக்கு சட்டம் தண்டனை அளிக்கிறது:

18 வயதை கடந்த ஆண், 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தையை மணந்தால், அந்த ஆணிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும்/அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை தண்டத்தொகை விதிக்கப்படும்.

யாரேனும் குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்தாலோ, நடத்தினாலோ, நடத்துவதற்கு உதவினாலோ அல்லது உறுதுணையாக இருந்தாலோ, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை மற்றும்/அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை தண்டத்தொகை விதிக்கப்படும்.

18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தை / 21 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளை, திருமணத்தில் ஈடுபட்டால், அந்த குழந்தையின் காப்பாளர்/ காப்பாளர் பொறுப்பில் உள்ளவர் திருமணத்தை ஊக்குவித்தாலோ அல்லது அனுமதித்தாலோ, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும்/அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை தண்டத்தொகை விதிக்கப்படும்.

குழந்தை திருமணத்தை, குழந்தையின் காப்பாளர், ஊக்குவித்ததாகவோ அல்லது அனுமதித்ததாகவோ ஆதாரம் இல்லாவிட்டாலும், குழந்தை திருமணத்தைத் தடுக்கத் தவறியதற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: