திருமணமான ஒரு பெண்ணுடன், அவரின் கணவரின் அனுமதி இன்றி, வேறு ஒருவர் நெருங்கிய உறவு வைத்திருந்தால், அது குற்றவியல் குற்றமாக நீதிமன்றங்களால் கருதப்பட்டு வருகிறது.
பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் 158 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டப் பிரிவு 497 சட்டத்தின்படி திருமணமான பெண் ஒருவருடன், அவரது கணவரின் அனுமதியின்றி வேறு ஒரு ஆண் உறவுகொண்டால், அது தண்டனைக்குரிய குற்றம்.
அத்தகைய தவறான உறவிற்கு, பெண் அந்த ஆணை அழைத்து இருந்தாலும், பெண் குற்றம் செய்தவராக கருதப்பட மாட்டார். அதே வேளையில், இத்தகைய திருமணத்திற்கு புறம்பான செயலை, அந்தப் பெண்ணை செய்ய தூண்டியதாக கருதி, நீதிமன்றம் ஆணை தண்டிக்கும்.
இந்தச் சட்டத்தின் படி, ஒரு பெண்ணின் கணவர், வேறு ஒரு ஆணின் மனைவியிடம், திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தால், அதை அறிந்து கொண்ட அந்த கணவரின் மனைவி, நீதிமன்றத்தை நாட முடியாது. அதாவது, திருமணத்திற்கு புறம்பாக வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கும் தமது கணவரை, அவரது மனைவியால் இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்க இயலாது.
குற்றம் உறுதி செய்யப்பட்ட ஆணுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கும்.
ஆனால், நீதிமன்றங்களால் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி, இது நாள் வரை எத்தனை ஆண்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான தரவுகள் எதுவும் அரசுகளிடம் இல்லை.
பிறன்மனை நோக்குதலும், நீதிமன்றத்தின் பார்வையும்:
இத்தாலியில் வாழும் 41 வயதுடைய இந்தியர் ஜோசப் என்பவர், 2018ல் உச்ச நீதிமன்றத்தில், பெண்களுக்கான உரிமை இந்த சட்டத்தினால் தடை செய்யப்படுவதாக வழக்கு தொடுத்தார்.
அவர் தனது தரப்பில், பெண்கள் இந்தச் சட்டத்தினால் கணவரின் சொத்தாக பார்க்கப்படுகின்றனர். இது பெண் அடிமைத்தனத்தை முதன்மைப்படுத்துவதாக உள்ளது என வழக்கு தொடுத்தார்.
1954 இல், ஒருவர் இதே போன்ற ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது தரப்பில், ஆண்கள் இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவதாகவும், பெண்களுக்கு இந்தச் சட்டம் முழு பாதுகாப்பு வழங்குகிறது. ஆகவே இது ஆண் பெண் சமத்துவத்திற்கு எதிரானது என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சட்டப்பிரிவு அரசியல் அமைப்பின்படி செல்லாது என்று 1985 மற்றும் 1988இல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சட்டத் சீர்திருத்தங்களுக்காக 1971 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இரு குழுக்களும், பெண்களையும் தண்டிக்கும் வகையில் இந்தச் சட்டப்பிரிவு மாற்றப்பட வேண்டும் என்று முன்மொழிந்தன.
2011இல் வேறு ஒரு வழக்கை வினவிய உச்ச நீதிமன்றம், திருமணமான பெண்ணை அவரது கணவரின் சொத்தாக இந்தச் சட்டப்பிரிவு கருதுகிறது என்கிற கருத்தை மட்டும் உறுதி செய்தது.
இந்தச் சட்டம் குறித்து கருத்து சொல்லும் வல்லுநர்கள், உறவில் ஈடுபட்ட ஆணை மட்டும், குற்றவாளி என்று சொல்வதும், அதற்கு உறுதுணையாக இருந்த பெண்ணை, குற்றம் அற்றவர் எனக் கருதுவதும் அடிப்படை அறிவிற்கு எதிரானது. இது நிறுவனமாக்கப்பட்ட அப்பட்டமான ஓரவஞ்சனை.
ஒருவர், யாருடன் உறவு கொள்ள வேண்டும், யாருடன் தமது படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என சட்டங்கள் கட்டுப்படுத்த கூடாது என சில சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விருப்பத்துடன் இரு சட்டப்படியான வயதை அடைந்தவர்கள் உடலுறவு கொள்வது அவர்கள் அந்தரங்க உரிமை என்பதால், இந்த சட்டப்பிரிவு 497 எப்படிப் பொருந்தும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
இங்கே, திருமண உறவுக்கு வெளியே உறவு கொள்வது, சட்டப்படி சரியா தவறா என்று ஆராய்வதை காட்டிலும், விரும்பும் நபருடன் பாலுறவு கொள்வதற்கு, சட்டப்படியான வயதை அடைந்தவர்களுக்கு உரிமை உள்ளதா இல்லையா என்பதை மட்டுமே ஆராய வேண்டும்.
பிற நாடுகளின் சட்டம்:
ஐரோப்பிய நாடுகளைப் பொருத்தவரை, திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்துக் கொள்வதை, குற்றமாக கருதுவது இல்லை.
அமெரிக்காவை பொறுத்தவரை, பெரும்பாலான மாநிலங்களில், திருமணத்திற்கு புறம்பான உறவு, குற்றச் செயல் என கருதப்படுகிறது.
தென்கொரியாவில், 2015 வரை குற்றமாக கருதப்பட்ட, திருமணத்திற்கு புறம்பான உறவு, சட்டங்களில் மாறுதல் செய்யப்பட்டு, குற்றமற்ற செயலாக மாற்றி அமைக்கப்பட்டது.
எது எப்படியோ, இதுபோன்ற செயல்கள் மூலம் குற்றம் இழைத்தவரை, குற்றவாளி என சட்டப்படி நீதிமன்றத்தின் முன் உறுதிப்படுத்துவது இயலாத ஒன்று. ஆகவே, மனித சமூகத்தின் மனநிலையை பொறுத்து, இது குற்றமுள்ள செயலாகவும் குற்றமற்ற செயலாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப தன் நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளும்.
பிறன்மனை நோக்குதல் குற்றமா?
பல்லாயிரம் ஆண்டுகளாக, மனித
சமூகம், பிறன்மனை நோக்குதலை குற்றமாகவே கருதுகிறது. பிறன்மனை நோக்குதல்
குற்றம் இல்லை என்றால், திருமண உறவு என்பதன் புனிதத் தன்மை அல்லது சிறப்பு
தன்மை சிதைந்து விடும் என மனிதர்களின் மனநிலை பொதுவில் கருதுகிறது.