இனி திருமணம் முறிவு வழக்குகளுக்கு, நேரில் நீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை - நீதிமன்றம் அதிரடி

இனி திருமணம் முறிவு வழக்குகளுக்கு, நேரில் நீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை - நீதிமன்றம் அதிரடி

கடந்த 2016ம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் இந்து திருமண முறைப்படி திருமணம் முடித்துக் கொண்ட பெண் மற்றும் அவரது கணவர், அமெரிக்காவில் வாழ்கின்றனர்.  மேலும் தங்களது திருமணத்தை, சென்னை பெரியமேடு பதிவுத்துறையில் அலுவவலகத்தில் திருமணம் பதிவு செய்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் இணையர்கள், அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு இடையே, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், இனி சேர்ந்து வாழ இயலாது என இருவரும் ஒருமனதாக முடிவு எடுத்து, திருமணம் உறவை முடித்துக் கொள்வது எனவும், அதன்படி 2021ம் ஆண்டு முதல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையேயமான ஒப்பந்தம் என்னவெனில், இருவரும் பிரிவதில் ஒருமித்த கருத்துடன் கொள்வது எனவும், வாழ்க்கை உதவித்தொகை என யாரும் யாரிடமும் கேட்கக் கூடாது எனவும், அவரவர் சொத்துக்களை அவரவர் இடம்  ஒப்படைக்க வேண்டும் என்ற கோட்பாடுகளுடன் முடிவு செய்தனர்.

இதையடுத்து, திருமண முறிவு கோரி கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பெண் வழக்கு தொடர்ந்தார்.

நுழைவுச்சீட்டு இடர்பாட்டினால், வழக்கில் அவரது கணவரால் நேரில் வர இயலவில்லை.  அவருக்கு பதிலாக, அவரது தந்தையை முகவராக நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மனு தாக்கல் செய்தார்.

கடந்த 2023ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட திருமண முறிவு வழக்கு நவம்பர் 15 வரை நிலுவையில் இருந்தது. 2023 நவம்பரில் மீண்டும் வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, மீண்டும், நுழைவுச்சீட்டு இடர்பாட்டினால் கணவரால் இந்தியா வர இயலவில்லை.

இந்நிலையில் வழக்கு தொடுத்த பின், அமெரிக்காவில் வேலை செய்வதற்காக செல்ல வேண்டிய சூழ்நிலையில், அவர் தனது தாயை தாயை பவர் ஏஜெண்டாக இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்படி மனு தாக்கல் செய்தார். வழக்கு வினவலுக்கு காணொளி மூலம் நீதிமன்றத்தில் தோன்ற அனுமதிக்க வேண்டும். நீதிமன்றத்தின் சார்பில் வழக்கறிஞரை அமர்த்த வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது கணவரும் இதே கோரிக்கையுடன் மனு செய்திருப்பதால் பெண்ணுடைய மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை.

அதே வேளையில், அமெரிக்க தூதரகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக ஆஜராக குடும்பநல நீதிமன்ற அறிவுறுத்தியது. ஆனால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் 12 1/2 மணி நேரம் மாறுபடுகிறது. அதனால் காலை 10 மணிக்கு விசாரணையை தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர், நாங்கள் இருவரும் காணொளி வாயிலாக வழக்கில் தோன்றியபோது, அமெரிக்க தூதரகத்தில் இல்லாததால் வாதங்களை பதிவு செய்ய முடியாது என குடும்ப நல நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதை எதிர்த்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வினவிய உயர் நீதிமன்ற நீதியரசர் நிர்மல் குமார், குற்ற வழக்குகளில் தான் தொடர்புடையவர்களை நேரில் வருவது கட்டாயம் என கூற முடியும். பிற வழக்குகளில், குறிப்பாக, திருமண முறிவு வழக்குகளில் காணொலிக் காட்சி மூலம் வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

திருமண முறிவு வழக்கு தொடர்ந்த இணையர்கள் நேரில் நீதிமன்றத்திற்கு வர வேண்டிய தேவையில்லை. ஏற்கனவே இருவர் தொடர்பான ஆவணங்களும், பொறுப்புறுதிகளும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இருவரும் அமெரிக்காவில் பணியில் இருப்பதால் ஒவ்வொரு முறை விசாரணை நடைபெறும் போதும் நேரில் கண்டிப்பாக வர வேண்டும் என கூற முடியாது. இன்றைய நிலையில் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் காணொலிக்காட்சி மூலம் வழக்காடுவது விரிவடைந்துள்ளது. அதனால், காணொலிக்காட்சி மூலம் வழக்கு நடத்துவதை நீதிமன்றம் உறுதிபடுத்த வேண்டும்.

திருமணம் முறிவு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அவர்கள் நேரில் வருவதால் எந்த பயனும் இல்லை. இனிமேல், திருமண முறிவு வழக்கு தாக்கல் செய்யும்போது மட்டும் தொடர்புடைய இருவரும் நேரில் வந்தால் போதுமானது. காணொலி மூலம் வழக்காடுபவர்கள் தங்களுக்கான அடையாளங்களுடன் எங்கிருந்து வழக்காடுகிறார்களோ அதை தெரிவித்தால் போதும். அனைத்தும் சரியாக இருப்பதாக கருதினால் திருமணம் முறிவு வழங்கலாம்" என்று ஆணையிட்டார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: