கருவுற்ற பெண்கள், இனிப்பு பொருட்களை அளவுடன் உண்பது, கருவிற்கு நல்லது என ஆய்வு தகவல்

கருவுற்ற பெண்கள், இனிப்பு பொருட்களை அளவுடன் உண்பது, கருவிற்கு நல்லது என ஆய்வு தகவல்

கரு தோன்றிய நாள் முதல், முதல் ஆயிரம் நாட்களுக்கு, குழந்தை செயற்கையான இனிப்புகளை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், அத்தகைய குழந்தைகளுக்கு, வளர்ந்த பின், இரண்டாம் வகை நீரழிவு பாதிப்பு (type 2 diabetes) மற்றும் உயர் குருதி அழுத்த (hypertension) குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டன் அரசு அமல்படுத்திய, சர்க்கரை வழங்கல் கட்டுப்பாடுகள் கொண்ட, அதாவது 1942 -ம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை, இடைப்பட்ட நாட்களில், பிறந்தவர்களின் உடல்நலம் குறித்த தரவுகளை, ஆய்விற்கு உட்படுத்தி, சர்க்கரை குறைவாக எடுத்துக் கொள்வதால், குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மை குறித்து அறிக்கை வெளியிட்டனர்.

உலக நலவாழ்வு அமைப்பு (WHO) வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் பிறந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, செயற்கையான இனிப்புகளை தவிர்த்தல், அவர்களின் உடல் நலத்திற்கு நன்மையானது.  அதேபோன்று, வளர்ந்து விட்ட நபர்கள், நாள் ஒன்றுக்கு, 50 கிராமிற்கு மிகாமல், செயற்கையான இனிப்புகளை உட்கொண்டால், அது உடல் நலத்திற்கு பெருமளவு பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை.

வாழ்வின் முதல் ஆயிரம் நாட்களுக்கு, செயற்கை இனிப்பை உட்கொள்ளாமல் இருந்தால், மரபு சார்ந்த நீரழிவு பாதிப்பு மற்றும் உயர் குருதி அழுத்த (hypertension) குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கும், அத்தகைய பாதிப்பு, வழக்கத்தை விட சுமார் 4 அல்லது 5 ஆண்டுகள் கழித்து ஏற்படுகிறது.

UC Berkeley and the National Bureau of Economics Research அமைப்பின் இணை ஆசிரியர் Paul Gertle, இந்த ஆய்வின் முடிவு குறித்து கருத்து கூறும் பொழுது "இனிப்பு என்பது புகையிலைக்கு ஒப்பானது.  குறிப்பாக குழந்தைகள் உணவு, இனிப்பு என்கிற நச்சுத்தன்மையை உள்ளடக்கி இருப்பதால், அதன் உற்பத்தியாளர்கள், பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல குறைபாடுகளுக்கு பொறுப்பானவர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.  எப்படி, புகையிலைக்கு அரசுகள் கடுமையான வரி அளவீடுகளை மேற்கொள்கின்றனவோ, அதே போன்று, இனிப்பு சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கும், அவர்களின் பொருட்களுக்கும், கடுமையான வரி அமல்படுத்தப்பட வேண்டும்"

Share this Post:

தொடர்பான பதிவுகள்: