ஓசூரில் இரு குழுக்களாக மொதிக்கொண்டவர்களில் இருவர் கைது

ஓசூரில் இரு குழுக்களாக மொதிக்கொண்டவர்களில் இருவர் கைது

இரு குழுக்களாக மொதிக்கொண்டவர்களில் இருவர் கைது

இருவருக்கிடையேயான சலசலப்பு, இரு குழு மோதலாக வடிவமெடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

ஓசூரில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

ஓசூர், அரசனட்டி மாரியம்மன் கோவில் கீழ் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை, 24. ஓட்டுநர்.

இவரது தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி, 43, தரப்பினருக்கும் இடையே கடந்த திங்கள் 29 ஆம் நாள் மாலை, அரசனட்டி சூர்யா நகரில் உள்ள வெங்கட்ராமன் என்பவரது வீட்டின் முன், தகராறு ஏற்பட்டது.

இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், சின்னதுரை மற்றும் அவரது தரப்பை சேர்ந்த நாகா என்ற நாகராசு மற்றும் காசி ஆகியோர் காயமடைந்தனர்.

அதே போல் ரவி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சுப்பிரமணி, வினோத் மற்றும் கவுரி ஆகியோர் காயமடைந்தனர்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் இரு குழுக்களை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக சின்னதுரை புகாரின்படி, ரவி, சுப்பிரமணி, வினோத், கவுரி ஆகிய நான்கு பேர் மீதும், ரவி கொடுத்த புகாரில், நாகா என்ற நாகராஜ், அரசனட்டி பாரதி நகர், 8வது தெருவை சேர்ந்த அசோக், 31, காசி மற்றும் சின்னதுரை, 24, ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில், அசோக் மற்றும் சின்னதுரை கைது செய்யப்பட்டனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: