ஓசூர் அருகே சரக்குந்து மோதி உழவர்கள் 2 பேர் பலி

ஓசூர் அருகே சரக்குந்து மோதி உழவர்கள் 2 பேர் பலி

ஓசூர் அருகே சரக்குந்து மோதி உழவர்கள் 2 பேர் பலி

கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர்கள் நாராயணன் (வயது 35), முனிராஜ் (35). இருவரும் உழவர்கள்.

இந்த நிலையில் கடந்த நாள் (01.07.2019) இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பாகலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

ஜீ.மங்கலம் என்ற ஊர் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த சரக்குந்து எதிர்பாராதவிதமாக இருவரும் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட நாராயணன், முனிராஜ் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாகலூர் காவலகள் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடல் Kஉறாய்விற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காவலகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் அருகே சரக்குந்து மோதி உழவர்கள் இருவர் ஒரே இடத்தில் உயிரிழந்த நிகழ்வு மக்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Share this Post:

தொடர்பான பதிவுகள்: