மாற்று இடம் தந்தால் எம் நிலங்களை கையகப் படுத்தலாம் - ஓசூர் உழவர்கள்

மாற்று இடம் தந்தால் எம் நிலங்களை கையகப் படுத்தலாம் - ஓசூர் உழவர்கள்

மாற்று இடம் தந்தால் எம் நிலங்களை கையகப் படுத்தலாம் - ஓசூர் உழவர்கள்

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு ஓசூர் அருகே உழவு செய்து வாழும் மக்கள் எதிர்ப்பு

சிப்காட் அமைக்க  நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கிருட்டிணகிரி  மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம்,  குருபரப்பள்ளி ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

கிருட்டிணகிரி மாவட்டம்,  குருபரப்பள்ளி ஊரைச் சேர்ந்த  பொது மக்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செயலட்சுமி சுப்பிரமணி தலைமையில்,  மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம் திங்கள் கிழமை அளித்த கோரிக்கை  மனுவில்:

குருபரப்பள்ளியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  மூன்று தலைமுறைகளாக கடந்த 150 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.

இங்குள்ள நிலங்களைச் சமன்படுத்தி  ராகி, நெல், அவரை, துவரை போன்ற பயிர்களையும்,  மா,  தென்னை, தேக்கு போன்ற மரங்களையும் வளர்த்து உழவு செய்து வருகிறோம். இந்த நிலங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் தவிர  வேறு வருவாய்
எங்களுக்கு கிடையாது.

தற்போது,  தமிழக அரசானது,  இந்த பசுமையான விளை நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைத்து பெரும் முதலாளிகளுக்கு விற்க  திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம்.

அவ்வாறு, விளை நிலங்களை கையகப்படுத்தினால்,  பல குடும்பங்கள் ஆதரவின்றி நடுத்தெருவில் நிற்க வேண்டி இருக்கும்.

எனவே, எங்களுக்கு மாற்று இடமோ அல்லது இழப்பீடோ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.