மதுரை அருகே கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழி

மதுரை அருகே கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழி

மதுரை அருகே கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழி

கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழியைக் கண்டு அகழாய்வு முகாமை சுற்றிப்பார்க்க வந்த மதுரை இளைஞர்கள் வியந்தனர்.

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப்  பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.

தொல்லியல் துறை, அகழாய்வு பகுதியில் பத்து அடி நாண்கு கோன வடிவத்தில் குழி தோண்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த ஐந்தாம் கட்ட ஆய்வுக்கு பதினைந்து தொல்லியல் குழிகள் தோண்டப்படவுள்ளது.

கடந்த சில நாட்களாக இரட்டைச் சுவர் மற்றும் பல்வேறு வடிவிலான பானைகள் கிடைத்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கடந்த நாள் (திங்கள்கிழமை - 01.07.2019) குழி தோண்டும் போது வட்டவடிவிலான தாழி கிடைத்தள்ளது.

கீழடியில் அகழாய்வு தொடங்கியதிலிருந்து முகாமிற்கு அன்றாடம் ஏராளமான பார்வையாளர்கள் தமிழர் தம் வரலாற்று சிறப்புகுகள் குறித்து தெரிந்துகொள்ள வருகின்றனர்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்த ஆய்வு குறித்த பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகிறார். அவர் போன்றோரின் தனி முயற்சிகளால் தான் இந்த ஆய்வே தொடர்ந்து நடந்தேரி வருகிறது.

நாளிதழ்களிலும் அகழாய்வு செய்திகள் வெளிவருகின்றன. அதனால் இங்கு பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தோம்.

இங்கு நீளமான இரட்டைச் சுவர், பல்வேறு வடிவிலான பானைகளில் பழம் நாட்களில் மக்கள் பயன்படுத்திய  வட்ட வடிவிலான தாழி ஆகியவற்றைப் பார்க்க வியப்பாக உள்ளது" என்று பார்த்து செல்வோர் கூறுகின்றனர்.