ஹீரோக்களா... அம்புட்டும் முட்டாப் பயலுக... நடிகை பளிசுன்னு புளிச்

ஹீரோக்களா... அம்புட்டும் முட்டாப் பயலுக... நடிகை பளிசுன்னு புளிச்

ஹீரோக்களா... அம்புட்டும் முட்டாப் பயலுக... நடிகை பளிசுன்னு புளிச்

உங்களுக்கு பிடிச்ச ஹீரோ யாருன்னு எதாவது ஒரு நடிகைய பிடித்து கேட்டால் ஒரு ஹீரோ பெயரை சொன்னால் இன்னொரு ஹீரோ கோபித்துக்கொள்வார் என்பதால் பொத்தாம் பொதுவாக எல்லா நடிகர் பெயரையும் சொல்வார்கள்.

இதற்கு முற்றிலும் விதி விலக்காக இந்தி கவர்ச்சி நடிகை ஒருவர், ஒரு பட்டியலை சொல்லி, அந்த பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் முட்டாப் பயலுக என்று ஒரு வரியில் அதிர்ச்சி மருத்துவம் தந்துள்ளார்.

பாலிவுட் கவர்ச்சி பாம் என்று பெயர் பெற்றிருந்தாலும் தமிழில் கமலுடன் தசாவதாரம், சிம்புவுடன் ஒஸ்தி படங்களில் நடித்திருப்பவர் மல்லிகா செராவத்.

அவர்தான் ஹீரோக்களை முட்டாள்கள் என வறுத்தெடுத்திருக்கிறார். அவர் ஓசூர் ஆன்லைனிடம் கூறும்போது,

"பாலிவுட் ஹீரோக்கள்ல பெரும்பாலானவங்க தன்னலமா இருக்காங்க. படங்கள்ல நடிக்க எனக்கு பல வாய்ப்புகள் வந்துச்சி. ஆனா அந்த படத்தோட ஹீரோக்கள் என்னை நடிக்க வெக்க கூடாதுன்னு ஒதுக்கி வச்சிட்டு தங்களோட நெருக்கமாக ஒத்துப்போகும் பெண் தொழிகளை அந்த வேடங்களில் நடிக்க வச்சாங்க. நான் நடிச்சதெல்லாம் என்னோட திறமைக்கு வந்த வாய்ப்புதான்.

அப்படி வரும் வாய்ப்புகளை கூட சில  ஹீரோக்கள் எனக்கு வராம தடுத்தாங்க. இப்படி இதுவரை சுமார் 30 படங்கள இழந்திருக்கிறேன்.

அந்த ஹீரோக்கள எல்லாம் ஸ்டுபிட்ஸ்னுதான் நான் சொல்வேன். பெண்ணுக்கு எதிரா இப்படி நடக்கற அடாவடிபத்தி நான் என்ன  பேசனாலும் அத யாரும் கண்டுக்கறதில்ல.

அந்த கான்... இந்த கான் என எல்லாம் முட்டாப் பயலுக...

இந்த திரை உலக ஆண்கள் பலர் தவரா நடந்துக்கிட்டாலும் உடன் நடிக்கும் நடிகைகளே அதை கண்டுக்காம இருக்கறதோடு என்னய பத்தி தப்பு தப்பா பேசறாங்க...’ என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் மல்லிகா செராவத்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: