பிக்பாஸ் 3 வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த தெலுங்கானா மற்றும் தமிழக காவல் துறையினர்

பிக்பாஸ் 3 வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த தெலுங்கானா மற்றும் தமிழக காவல் துறையினர்

பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த தெலுங்கானா மற்றும் தமிழக காவல் துறையினர்

ஆள்கடத்தல் வழக்கில் வனிதா விசயகுமாரிடம் விசாரணை செய்வதற்காக சென்னை செம்பரம்பாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி நடைபெறும் இடத்திற்குள் தெலங்கானா காவலர்கள் புகுந்துள்ளனர்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா.  கடந்த 2000-ம் ஆண்டில் ஆகாஷ் என்ற டிவி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய் என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற மகள்  உள்ளனர்.

இதன் பின்னர்  வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் விவாகரத்து ஆனது.  

2007-ம் ஆண்டில் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் பிறந்தார்.

2010-ம் ஆண்டுக்கு பின்னர் ஆனந்த ராஜையும் விவாகரத்து செய்தார் வனிதா. தற்போது அவர் கமல் வழிநடத்தும் பிக்பாஸ்௩ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ஜெயந்திகா தனது தந்தை ஆனந்தராஜுடன் தெலுங்கானாவில் வாழ்ந்து வந்தார்.

மகள் ஜெயந்திகாவை கடந்த பிப்ரவரி திங்கள் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா காவலர்களிடம் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக் கொண்ட அம்மாநில காவல்துறையினர் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு காவல் துறையின் உதவியை நாடியது தெலுங்கானா காவல் துறை.

பிக்பாஸ் 3 வீடு காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நசரத் பேட்டை காவலர்களுடன் தெலுங்கானா காவலர்கள் விசாரணை நடத்த பிக்பாஸ்௩ வீட்டிற்கு சென்று உள்ளனர்.