நரேந்திர மோடியின் தொகுதியில் பெண்ணும் பெண்ணும் திருமணம்!

நரேந்திர மோடியின் தொகுதியில் பெண்ணும் பெண்ணும் திருமணம்!

நரேந்திர மோடியின் தொகுதியில் பெண்ணும் பெண்ணும் திருமணம்!

இந்திய நாட்டின் முதன்மை அமைச்சர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் பெண்ணும் பெண்ணும் மணம் முடித்து அங்குள்ள மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

தங்களது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, உறவுக்காரப் பெண்கள் இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த திருமணம், அவர்களது குடும்பத்தினரை மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவியதால், பொதுமக்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாராணசியில் இதுபோன்று ஒரு பாலின திருமணம் வெளிப்படையாக நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

ரோகானியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், சிவன் கோயிலுக்கு வந்து தங்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் அதற்கு பூசாரி மறுத்ததால், கோயிலுக்குள் அமர்ந்து, சிவப்பு நிறக் கயிற்றில் தாலியை ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்குக் கட்டி மாலை மாறிக் கொண்டனர்.

அதனைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வேறு அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள், அப்பெண்கள் கோயிலை விட்டு வெளியேறிவிட்டனர்.

இவர்களது திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த திருமணம் சட்டப்படி செல்லுமா என்பது யாருக்கும் இதுவரை தெரியவில்லை.

சைவ சிந்தாந்தம் பின்பற்றுவோரின் அடையாளமாக திகழும் இந்த வாரணாசியில் இது போன்றதொரு நிகழ்வு, அதிலும் சிவன் கோவிலிலேயே நடந்துள்ளது நாட்டு மக்களிடையே அதிருச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: