பிக்பாஸ் 3 வீட்டில் காவல்துறை தேடும் மற்றொரு குற்றவாளி?

பிக்பாஸ் 3 வீட்டில் காவல்துறை தேடும் மற்றொரு குற்றவாளி?

பிக்பாஸ் 3 வீட்டில் காவல்துறை தேடும் மற்றொரு குற்றவாளி?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகைகளில் பலரை காவல் துறை தேடி வருகிறது போலும்.

ஆள் கடத்தில் வழக்கில் கடந்த நாள் வனிதா விசயகுமாரை தேடி தெலுங்கானா மற்றும் தமிழக காவல்துறை பிக்பாஸ் 3 வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தது போல தற்போது மற்றொறு பங்கேற்பாளரும், அந்த வீட்டில் வாழ்ந்து வருபவருமான மீரா மிதுன், காவல் விசாரணைக்கு நேரில் வருமாரு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்காசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சில நாட்களுக்கு முன் தொடங்கியுள்ளது.

இதில் பங்கேற்பவர்கள், தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு கருவிகளும் இல்லாமல் 100 நாட்களுக்கு அந்த குறிப்பிட்ட வீட்டில், பிற பங்கேற்பாளர்களுடன் ஒத்து வாழ்வது தான் இந்த நிகழ்ச்சியின் சட்ட திட்டம்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு.

கடந்த முறைகளை போலவே இந்த முறையும் கமல் தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த ஆண்டு போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள்.

சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த கலந்துரையாடல்கள் பெருமளவில் இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் கூடுதல் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் ரூ. 50,000 பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ரஞ்சிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில்சூலை 19-ம் நாள் விசாரணைக்கு வரும்படி நடிகை மீரா மிதுனுக்கு தேனாம்பேட்டை காவல்துறை அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

விசாரணைக்கு நேரில் வராவிட்டால் குற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதால் நிகழ்ச்சியிலிருந்து திரும்பி வந்தபிறகு நேரில் வருவதாக மீரா மிதுன் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினர் அந்த பதிலை ஏற்பார்களா, அல்லது அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவார்களா என்பது தெரியவில்லை.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: