ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பெண் வயிற்றில் முக மூடி வைத்து தைத்தனர்!!!

ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பெண் வயிற்றில் முக மூடி வைத்து தைத்தனர்!!!

ஓசூரில் அதிமுக தலைவர் தம்பிதுரை அவர்கள் மருத்துவ கல்லுரி மருத்துவமனை கட்டி வரும் நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் பல தொடர் மருத்துவ குளறுபடிகள் நடந்தேரி வருகிறது.

கடந்த சில திங்கள்களுக்கு முன், ஓசுர் அரசு மருத்துமனையில் நோயாளிக்கு கெட்டுப்போன குருதியை ஏற்றினர்.

பின்னொரு நாளில், கெட்டுப்போன மருந்து நரம்பு வழியாக ஏற்றப்பட்டது.

பின்னொரு நாளில், கொடுக்கப்பட்ட மருந்து வில்லையில் இரும்பு கம்பித்துண்டு இருந்தது கணடறையப்பட்டது.

தற்போது, அறுவை மருத்துவம் முறையில் குழந்தை பெற்றடுத்த பெண்ணின் வயிற்றில் மூக்கை மூடும் தூணி வயிற்றினுள் வைத்து தைக்கப்பட்டுள்ளது.

ஓசூர் அரசனட்டி சூர்யா நகரைச் சேர்ந்த ராகவேந்திரா, கவிதா தம்பதிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

கவிதாவிற்கு கடந்த சனவரி திங்களில், ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவை மருத்துவம் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

மருத்துவம் முடிந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட கவிதாவிற்கு, தொடர்ந்து வயிற்று வலி இருந்துள்ளது. இதனால், 82 கிலோ இருந்த கவிதா, தொடர்ச்சியாக எடை குறைந்து தற்போது 35 கிலோவாக குறைந்துள்ளார்.

பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்றும் வலி குணமாகவில்லை. இதற்கிடையே இயற்கை உபாதையை கழிக்கும் போது, மருத்துவமனையில் முகத்திற்கு அணியும் துணி வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கவிதா, தன் உறவினரான செவிலியர் ஜோதி என்பவரிடம் கூறியுள்ளார்.

அப்போது தான், பிள்ளைபேறு அறுவை மருத்துவம் செய்யும் போது, ணொசெ Mஅச்க் எனப்படும் துணியை வைத்து தைத்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.

இதை அறிந்த கவிதாவின் உறவினர்கள், இரவு ஓசூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

ஓசூர் நகர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கவிதாவை ஸ்கேன் செய்து, பிறகு மேல் சிகிசைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர்.

ஏழை எளிய மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அரசு மருத்துவர்கள் கவனக்குறைவாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், அறுவை மருத்துவம் செய்த மருத்துவர் உட்பட அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.