அவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா ?

அவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா ? ஒசூரில் மோடி அரசின் ஆயுதம் ஏந்திய விரைவு அதிரடிப்படை காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகை : பொதுமக்களிடம் அச்சம்

ஒசூர் நகரில் மோடி அரசின் ஆயுதம் ஏந்திய விரைவு அதிரடிப்படை காவலர்கள் மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆகியோர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். இந்த ஒத்திகையால் பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

விரைவு அதிரடிப்படை காவலர்கள் இனவாத கலவரங்களை தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோடி அரசின் அதிரடி காவல் படை சிறப்பு படையாகும். இப்படை கலவரம் மற்றும் அது தொடர்பான அமைதியின்மையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த நிலையில் ஒசூர் நகரில் மோடி அரசின் 100க்கும் மேற்பட்ட விரைவு அதிரடிப்படை காவலர்கள் மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட சட்டம் ஒழுங்கு காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

காந்தி சாலை, நேதாசி சாலை, ஏரித்தெரு, பழைய பெங்களுர் சாலை ஆகிய சாலைகள் வழியாக காவல்துறையினர் அணிவகுத்து சென்றனர்.

மோடி அரசின் ஆயுதம் தாங்கிய காவலரின் இந்த அணிவகுப்பு பொதுமக்கள் மணதி அச்சத்தை ஏற்படுத்தியது.

வரும் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஒசூர் பகுதியில் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படும், விநாயகர் சதுர்த்தி விழா நேரங்களில் மத ரீதியான கலவரங்கள் ஏற்படாத வண்ணம் காவலர்கள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள்,

அந்த வகையில் முன்கூட்டியே அதிவிரைவு காவலர்களைன் ஆயுதம் தாங்கிய அணிவகுப்பை காவலர்கள் நடத்தியுள்ளனரா அல்லது அவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா என பொதுமக்களிடையே பேசி வருகின்றனர்.

காவலர்களிடம் இதுகுறித்து கேட்டபோது பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அங்கே இந்த அணிப்பு நடத்தப்படும் என தெரிவித்தனர். அந்த வகையில் ஒசூரில் அணிவகுப்பு நடத்தப்பட்டதாக கூறினர்.