அமெரிக்கப் புலனாய்வுத் துறை (FBI) 15 இணைய தளங்களை முடக்கியது

சேவை மறுப்பு தாக்குதல் DDoS அமெரிக்க புலானாய்வு FBI
சேவை மறுப்பு தாக்குதல் DDoS அமெரிக்க புலானாய்வு FBI

கிருத்துமஸ் கொண்டாட்டங்களை அமெரிக்க புலனாய்வுத் துறை வெற்றிகரமாக பாதுகாத்தது.

அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையின் படி, அமெரிக்க புலனாய்வுத் துறை, சேவை மறுப்பு தாக்குதல் என்பதை ஒரு சேவையாக வழங்கி வந்த 15 இணைய தளங்களை முடக்கியும், அதன் உரிமையாளர்கள் என்று கண்டரியப்பட்ட 3 நபர்களை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

“சேவை மறுப்பு தாக்குதல் (DDoS)” அல்லது “இயக்கிகள் (Booter)” அல்லது “அழுத்திகள் (Stresser)” என்கிற சேவையை, ஏற்கனவே தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, இணைய குற்றவாளிகளால் ஊடுருவப்பட்டு, ஒரு வலைப்பின்னலாக மாற்றப்பட்ட கணிணி கருவிகள் மூலம், பயன்பாட்டிற்கு தக்கவாறு வாடகை அல்லது ஒப்பந்த கட்டணம் வாங்கிக் கொண்டு, பிற இணைய தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஏதுவாக்குவதை ஒரு சேவையாக வழங்கி வந்துள்ளனர்.

இவ்வாறான தாக்குதலால் வங்கி சேவைகள், விளையாட்டு பயன்பாட்டு கருவிகள் (சோனி பிளே சிடேசன் & மைக்ரோ சாப்டின் எக்ஸ் பாகஸ்), பிற இணைய தளங்கள், அவற்றின் வழங்கன்கள் என பல தாக்குதலுக்கு உட்பட்டு செயல் பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டன.

கடந்த சித்திரை (ஏப்ரல்) திங்களின் போது டட்சு காவல் துறையினர் உலகின் மிகப்பெரிய சேவை மறுப்பு தாக்குதல் சேவை வழங்குனரான ‘வெப்-ஸ்ட்ர்ஸ்ஸர்’ என்ற அமைப்பை முடக்கி, அதன் செயல்பாட்டாளர்களை கைது செய்தது. இவர்கள் இது வரை சுமார் 40 லட்சம் இணைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவை மறுப்பு தாக்குதல் என்பதை “கற்றலுக்கான ஆய்வு அழுத்திகள்” என்ற போர்வையில் வழங்கி வந்த கீழ் குறிப்பிட்டுள்ள 15 இயக்கிகளின் இணைய முகவரி பெயர்களை அமெரிக்க புலாய்வுத்துரை முடக்கியுள்ளது.

 1. critical-boot.com
 2. ragebooter.com
 3. anonsecurityteam.com
 4. downthem.org
 5. quantumstress.net
 6. booter.ninja
 7. bullstresser.net
 8. defcon.pro
 9. str3ssed.me
 10. defianceprotocol.com
 11. layer7-stresser.xyz
 12. netstress.org
 13. request.rip
 14. torsecurityteam.org
 15. Vbooter.org

சேவை மறுப்பு தாக்குதல் சேவை மூலம் அமெரிக்க மற்றும் உலகளாவிய அளவில் கல்விக்கூடங்கள் முதல் அரசு நிறுவங்கள் வரை பல அமைப்புகளின் இணைய வலை அமைப்புகள் பாதிப்படைந்து வந்துள்ளன.

அமெரிக்க பின்செல்வேனியா மாநிலத்தின் டேவிட் புகோஸ்கி (23) ‘குவான்டும் ஸ்ட்ரெஸ்ஸர்’ என்ற பெயரில் சுமார் 80,000 வாடிக்கையாளர்களை கொண்டு 2012 முதல் இவ்வகை சேவை மறுப்பு தாக்குதல்களை நடத்து வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவரின் சேவையகம் மூலம் 2018-ல் மட்டும் சுமார் 50,000 தாக்குதல்கள் உலகம் முழுவதிலும் நடத்தப்பட்டுள்ளது.

‘டெளன் தெம்’ மற்றும் ‘அம்ப் நோட்’ என்ற பெயர்களில் நடத்தப்பட்டு வந்த சேவை மறுப்பு தாக்குதல் நடத்துபர்களான மேத்யூ கேட்ரல் (30) மற்றும் சோன் மார்டினெஷ் (25) ஆகியோரை அமெரிக்க புலானய்வுத் துறை கைது செய்துள்ளது.

‘டெளன் தெம்’ என்ற அமைப்பு மூலம் 2014 முதல் இதுவரை சுமார் 200,000 தாக்குதல்கள் 2000 வாடிக்கையாளர் மூலம் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம், அமெரிக்க புலானாய்வுத் துறை, சேவை மறுப்பு தாக்குதல் சேவை நடத்துபர்கள், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.