மாநில அளவிலான குங்பூ போட்டிகள்

ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர்.

ஒசூரில் மாநில அளவிலான குங்பூ போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர்.

ஒசூர் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு குங்பூ கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான குங்பூ போட்டிகள் நடைபெற்றது.

ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர்.

ஆயுதம் ஏந்திய போட்டிகள், ஆயுதம் இல்லாத போட்டிகள், லைட் சாண்டா என 3 வகைகளில் இந்த குங்பூ போட்டிகள் நடைபெற்றது.  இதில் இளையோர், சிறியோர், மூத்தவர் பிரிவுகளில் மாணவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

காலை முதல் மாலை வரை இன்று ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாடினர்.

மேலும் தனித்தனியாகவும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் தனித்திறமைகளை நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கி தேர்வி செய்தனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் தேசிய அளவில் ஐதராபாத்தில் நடைபெறும்  குங்பூ போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த போட்டிகளை காண பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.