தேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி

கிருட்டிணகிரி பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வண்டிகள் சென்று வருகின்றன. அதிவேகமாக செல்லும் வண்டிகளால் அப்பகுதியில் ஏராளமான விபத்துக்கள் நடந்து வருகிறது.

ஒசூர் அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை மனநோயாளி ஒருவர் படுத்து உருண்டு கடந்து சென்றார்.

தன்னுடைய பசியை போக்க நாள்தோறும் சாலையை கடக்கும் மனநோயாளியால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.

எனவே இதனை தவிர்க்க அவரை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒசூர் அருகே பெங்களுர் கிருட்டிணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாமல்பள்ளம் என்ற இடத்தில் மனநோயாளி ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்றார்.

பள்ளமான இந்த சாலையில் அதிவேகமாக வந்த வண்டி ஓட்டிகள் மனநோயாளியின் இந்த செயலால் வண்டிகளை மெதுவாக இயக்கி சென்றனர்.

50 வயது மதிப்புடைய இந்த மனநோயாளிக்கு நடக்க முடியாததால் தனது பசிக்காக உணவை தேட சாலையின் இருபுறங்களுக்கும் அவ்வப்போது ஊர்ந்து சென்று வருகிறார்.

கிருட்டிணகிரி பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வண்டிகள் சென்று வருகின்றன.

அதிவேகமாக செல்லும் வண்டிகளால் அப்பகுதியில் ஏராளமான விபத்துக்கள் நடந்து வருகிறது.

மனநோயாளியின் இந்த செயலால் அப்பகுதியில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.

எனவே சமூக அக்கரை கொண்டவர்கள் அல்லது அரசுத்துறை அலுவலர்கள் இந்த மனநலம் சரியில்லாத இந்த நபரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.