இந்தாண்டு இரஷியா எச்.ஐ.வி-க்கான புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்ய இருக்கிறது

HIV Vaccine தடுப்பூசியை
HIV Vaccine தடுப்பூசியை

அறிவியலாளர்களுடன் இணைந்து இரஷிய மருத்துவர்களும் மாசுகோவின் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடுவத்தின் திறன்மிக்கவர்களும் இந்த ஆண்டு 2019, நோய் குணப்படுத்த தக்க தடுப்பூசியை ஆய்விற்காக மனிதரிடம் முயற்சி செய்ய இருக்கின்றனர்.

நடுவத்தின் இயக்குனர் அலெக்ஸி மசுஸ் இணையதளத்திடம் கூறும் போது, இந்த புதிய மருத்துவ தடுப்பூசியானது உலகில், நோயாளிகள் மிக நீண்ட நாட்களுக்கு மருந்து எடுத்துக்கொள்வதை குறைக்கும் என்றார். மேலும் அவர் “இந்த மருத்துவ தடுப்பூசி முறை மிகவும் தேவையானது மற்றும் மருத்துவ செலவை நாடுகளுக்கும் நோயாளிகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும்.”

இவ்வாறான கள ஆய்வு, பல ஆண்டுகள் எடுக்கும் என்றாலும், இப்போது, இந்தாண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வு மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் தடுப்பு மருந்து – தடுப்பூசியை நோயாளிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த கள ஆய்வு வெற்றிபெற்றால், இந்த இரஷிய மருத்துவ தடுப்பூசியானது, அடிப்படையில் “மனித நோய் எதிர்பு குறைபாடு நச்சுயிரி” (HIV Virus)-யை எதிர்த்து போராடுவதற்கான ஒரு புதிய கருவியாக செயல்படும்.

இதற்கிடையே, எச் ஐ வி தொற்றை கண்டுபிடிக்க, எடுத்து செல்லத்தக்க புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த கருவியானது வழக்கமான திறம்படு-பேசி (Smartphone) மூலம் இயங்கும்.

இதன் சிறப்பு சில்லு (Chip), நச்சுயிரியின் ரைபோ கரு அமில(ஆர்.என்.ஏ)-த்தை ஒரு சொட்டு குருதியில் இருந்து உறிஞ்சி எடுத்து ஆய்வை மேற்கொண்டுவிடும்.

இந்த கருவி ஏற்கனவே பல தன்னார்வலர்களிடம் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு விட்டது.

ஆய்வின் முடிவில், இந்த கருவி 99.1% வரை சரியாக எச் ஐ வி தொற்று உடையவர்களை கண்டரிந்துள்ளது. மேலும் 94.6% வரை சரியாக எச் ஐ வி தொற்று இல்லாதவர்களை கண்டரிந்துள்ளது. அதாவது, எச் ஐ வி தொற்று உடையவர்கள் பெரும்பாலும் சரியாக கண்டரியப்பட்டாலும், இல்லாதவர்களை சில நேரங்களில் தொற்று உடையவர்களாக காட்டியுள்ளது.

மேலும், இந்த கருவியில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம், குறைந்த செலவில் செயல்படுவதாகும்