அண்மை கட்டுரைகள்

கோட்டை மாரியம்மன் கோவில், ஓசூர். Kottai Mariyamman Temple, Hosur

0
அருள் மிகு கோட்டை மாரியம்மன் கோவில், ஓசூர் முகவரி: இராம் நகர், தேன்கனிக்கோட்டை சாலை, ஓசூர் 635109 தொ பே: தொடர்பு கொள்ள: வழிபாட்டு நேரம்: காலை 5 முதல் நடுப்பகல் 12 வரை வரைபடம்: வரைபடத்தில் காண்க “மாரி” என்றால் தமிழில் மழை என்று பொருள்படும். மழையை தமிழர்களுக்கு தருவித்து தருபவள் மாரி அம்மா – அவளே ஓசூரில் மாரி அம்மனாக எழுந்தருளியுள்ளார். சித்திரை – வைகாசி திங்கள்களில், பொதுவாக தமிழகம் முழுவதும் மாரி (மழை) அம்மாவிற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இத்தகைய விழாக்களால் மழையின் கடவுளான மாரி அம்மா தமிழர்களுக்கு மும்-மாரி பொழிவாள். இன்றைய நாட்களில், மழையை தருபவள் மழை கடவுள் மாரி அம்மா என்பது அறியாது, அவளிடம் மழையை வேண்டாமல், காசு பணம் வேண்டுவதாலோ என்னவோ, தமிழகத்தில் மழை தொடர்ந்து பொய்த்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை திங்களில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஓசூரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்நாளில், ஒசூருக்கு அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கும். இந்த கோவிலினுள், பிளேக் மாரியம்மன், டெங்கு மாரியம்மன், மலேரியா மரியம்மன் என பக்தர்கள், தங்களின் நோய்களை குணப்படுதியமைக்கு நன்றியாக பலவாராக மாரி அம்மனை வழிபடுகின்றனர். 1970 ஆண்டு வாக்கில், அத்திப்பள்ளி பகுதியில், பிளேக் நோய் தாக்கி பலர் மடிந்ததால், நம்பிக்கையாளர்கள் ஓசூர் மாரி அம்மனிடம் வேண்டி, தங்களை நோய் தாக்குதலில் இருந்து காத்துக்கொண்டரர். இதனால், பிளேக் மாரி அம்மன் என சிலை வைத்து இன்று வரை அம்மனுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். மூகொன்டபள்ளி பகுதியில் மணல்வாரி (Rubella) நோய் தாக்குதல் கட்டுக்கடங்காமல் ஏற்பட்டு பல குழந்தை உயிர்கள் பலியாவதை கண்ட அப்பகுதி மக்கள், மணல் மாரி அம்மன் என்று சிலை அமைத்து இன்று வரை நன்றி செலுத்தி வருகின்றனர். சூளகிரி பகுதியில் ஆடு மற்றும் மாடு மந்தைகளை இடி-மின்னல், காட்டு விலங்குகள், நோய் இவற்றில் இருந்து அம்மன் காத்து வருவதால், மந்தை மாரி அம்மன் என வழிபட்டு வருகின்றனர். இன்றைக்கு கோட்டை மாரி அம்மன் கோவில் இருக்கும் இடத்தில் வெள்ளைகாரர்கள் அமைத்த மாபெரும் கோட்டை ஒன்று 1960-களின் கடைசி வரை இருந்துள்ளது. அந்தை வெள்ளைக்கார துரை பிரெட் என்பவர் கட்டியுள்ளார். உள்ளூர் மக்கள் அந்த கோட்டையை சூரையாடி, சிதலமாக்கி சீரழித்துள்ளனர். இன்றும், அந்த கோட்டையின் பாலம் மட்டும் மீதமுள்ளது.  மேலும்

Temple Festival Photos

Hosur Kottai Mariamman Temple

Hosur Kottai Mariyamman Festival

Kottai Mariamman - Hosur Temple Festival

Hosur Kottai Mariamman Temple

Kottail Mariamman

Kottai Mariamman Temple

இந்தாண்டு இரஷியா எச்.ஐ.வி-க்கான புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்ய இருக்கிறது

0
அறிவியலாளர்களுடன் இணைந்து இரஷிய மருத்துவர்களும் மாசுகோவின் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடுவத்தின் திறன்மிக்கவர்களும் இந்த ஆண்டு 2019, நோய் குணப்படுத்த தக்க தடுப்பூசியை ஆய்விற்காக மனிதரிடம் முயற்சி செய்ய இருக்கின்றனர். நடுவத்தின் இயக்குனர் அலெக்ஸி மசுஸ் இணையதளத்திடம் கூறும் போது, இந்த புதிய மருத்துவ தடுப்பூசியானது உலகில், நோயாளிகள் மிக நீண்ட நாட்களுக்கு மருந்து எடுத்துக்கொள்வதை குறைக்கும் என்றார். மேலும் அவர் “இந்த மருத்துவ தடுப்பூசி முறை மிகவும் தேவையானது மற்றும் மருத்துவ செலவை நாடுகளுக்கும் நோயாளிகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும்.” இவ்வாறான கள ஆய்வு, பல ஆண்டுகள் எடுக்கும் என்றாலும், இப்போது, இந்தாண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வு மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் தடுப்பு மருந்து – தடுப்பூசியை நோயாளிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த கள ஆய்வு வெற்றிபெற்றால், இந்த இரஷிய மருத்துவ தடுப்பூசியானது, அடிப்படையில் “மனித நோய் எதிர்பு குறைபாடு நச்சுயிரி” (HIV Virus)-யை எதிர்த்து போராடுவதற்கான ஒரு புதிய கருவியாக செயல்படும். இதற்கிடையே, எச் ஐ வி தொற்றை கண்டுபிடிக்க, எடுத்து செல்லத்தக்க புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியானது வழக்கமான திறம்படு-பேசி (Smartphone) மூலம் இயங்கும். இதன் சிறப்பு சில்லு (Chip), நச்சுயிரியின் ரைபோ கரு அமில(ஆர்.என்.ஏ)-த்தை ஒரு சொட்டு குருதியில் இருந்து உறிஞ்சி எடுத்து ஆய்வை மேற்கொண்டுவிடும். இந்த கருவி ஏற்கனவே பல தன்னார்வலர்களிடம் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு விட்டது. ஆய்வின் முடிவில், இந்த கருவி 99.1% வரை சரியாக எச் ஐ வி தொற்று உடையவர்களை கண்டரிந்துள்ளது. மேலும் 94.6% வரை சரியாக எச் ஐ வி தொற்று இல்லாதவர்களை கண்டரிந்துள்ளது. அதாவது, எச் ஐ வி தொற்று உடையவர்கள் பெரும்பாலும் சரியாக கண்டரியப்பட்டாலும், இல்லாதவர்களை சில நேரங்களில் தொற்று உடையவர்களாக காட்டியுள்ளது. மேலும், இந்த கருவியில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம், குறைந்த செலவில் செயல்படுவதாகும்  

அமெரிக்கப் புலனாய்வுத் துறை (FBI) 15 இணைய தளங்களை முடக்கியது

0
கிருத்துமஸ் கொண்டாட்டங்களை அமெரிக்க புலனாய்வுத் துறை வெற்றிகரமாக பாதுகாத்தது. அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையின் படி, அமெரிக்க புலனாய்வுத் துறை, சேவை மறுப்பு தாக்குதல் என்பதை ஒரு சேவையாக வழங்கி வந்த 15 இணைய தளங்களை முடக்கியும், அதன் உரிமையாளர்கள் என்று கண்டரியப்பட்ட 3 நபர்களை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. “சேவை மறுப்பு தாக்குதல் (DDoS)” அல்லது “இயக்கிகள் (Booter)” அல்லது “அழுத்திகள் (Stresser)” என்கிற சேவையை, ஏற்கனவே தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, இணைய குற்றவாளிகளால் ஊடுருவப்பட்டு, ஒரு வலைப்பின்னலாக மாற்றப்பட்ட கணிணி கருவிகள் மூலம், பயன்பாட்டிற்கு தக்கவாறு வாடகை அல்லது ஒப்பந்த கட்டணம் வாங்கிக் கொண்டு, பிற இணைய தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஏதுவாக்குவதை ஒரு சேவையாக வழங்கி வந்துள்ளனர். இவ்வாறான தாக்குதலால் வங்கி சேவைகள், விளையாட்டு பயன்பாட்டு கருவிகள் (சோனி பிளே சிடேசன் & மைக்ரோ சாப்டின் எக்ஸ் பாகஸ்), பிற இணைய தளங்கள், அவற்றின் வழங்கன்கள் என பல தாக்குதலுக்கு உட்பட்டு செயல் பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டன. கடந்த சித்திரை (ஏப்ரல்) திங்களின் போது டட்சு காவல் துறையினர் உலகின் மிகப்பெரிய சேவை மறுப்பு தாக்குதல் சேவை வழங்குனரான ‘வெப்-ஸ்ட்ர்ஸ்ஸர்’ என்ற அமைப்பை முடக்கி, அதன் செயல்பாட்டாளர்களை கைது செய்தது. இவர்கள் இது வரை சுமார் 40 லட்சம் இணைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேவை மறுப்பு தாக்குதல் என்பதை “கற்றலுக்கான ஆய்வு அழுத்திகள்” என்ற போர்வையில் வழங்கி வந்த கீழ் குறிப்பிட்டுள்ள 15 இயக்கிகளின் இணைய முகவரி பெயர்களை அமெரிக்க புலாய்வுத்துரை முடக்கியுள்ளது.
 1. critical-boot.com
 2. ragebooter.com
 3. anonsecurityteam.com
 4. downthem.org
 5. quantumstress.net
 6. booter.ninja
 7. bullstresser.net
 8. defcon.pro
 9. str3ssed.me
 10. defianceprotocol.com
 11. layer7-stresser.xyz
 12. netstress.org
 13. request.rip
 14. torsecurityteam.org
 15. Vbooter.org
சேவை மறுப்பு தாக்குதல் சேவை மூலம் அமெரிக்க மற்றும் உலகளாவிய அளவில் கல்விக்கூடங்கள் முதல் அரசு நிறுவங்கள் வரை பல அமைப்புகளின் இணைய வலை அமைப்புகள் பாதிப்படைந்து வந்துள்ளன. அமெரிக்க பின்செல்வேனியா மாநிலத்தின் டேவிட் புகோஸ்கி (23) ‘குவான்டும் ஸ்ட்ரெஸ்ஸர்’ என்ற பெயரில் சுமார் 80,000 வாடிக்கையாளர்களை கொண்டு 2012 முதல் இவ்வகை சேவை மறுப்பு தாக்குதல்களை நடத்து வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவரின் சேவையகம் மூலம் 2018-ல் மட்டும் சுமார் 50,000 தாக்குதல்கள் உலகம் முழுவதிலும் நடத்தப்பட்டுள்ளது. ‘டெளன் தெம்’ மற்றும் ‘அம்ப் நோட்’ என்ற பெயர்களில் நடத்தப்பட்டு வந்த சேவை மறுப்பு தாக்குதல் நடத்துபர்களான மேத்யூ கேட்ரல் (30) மற்றும் சோன் மார்டினெஷ் (25) ஆகியோரை அமெரிக்க புலானய்வுத் துறை கைது செய்துள்ளது. ‘டெளன் தெம்’ என்ற அமைப்பு மூலம் 2014 முதல் இதுவரை சுமார் 200,000 தாக்குதல்கள் 2000 வாடிக்கையாளர் மூலம் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம், அமெரிக்க புலானாய்வுத் துறை, சேவை மறுப்பு தாக்குதல் சேவை நடத்துபர்கள், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.        

புனித குழந்தை தெரேசாள் ஆலயம், ஓசூர், St Theresa of Child Jesus Church, Hosur

0
புனித குழந்தை தெரேசாள் ஆலயம், ஓசூர், St Theresa of Child Jesus Church, Hosur முகவரி: St Therasa of Child Jesus Church, Divine Nagar, Hosur 635109 Tamil Nadu தொ பே: தொடர்பு கொள்ள: வழிபாட்டு நேரம்: திங்கள் – காரி (சனி) கிழமை : மாலை 6.30 | ஞாயிறு : காலை 8.15 வரைபடம்: வரைபடத்தில் காண்க ஒன்பது நாள் வழிபாடு / சிறப்பு வழிபாடு:
 • செவ்வாய்: புனித அந்தோனியார்
 • வியாழன்: புனித குழந்தை இயேசுவின் தெரேசாள்
 • முதல் காரிக் (சனி) கிழமை: புனித மரியாளுக்காக தேர்
 • முதல் வெள்ளி: அர்பணிப்பு
இந்த கத்தோலிக்க ஆலயம், டிவைன் நகர் பங்கிற்காக, அருள் தந்தை அருள்ராசு அவர்களால், பொது மக்கள் உதவியுடன் கட்டப்பட்டது. டிவைன் நகர் பங்கானது ஓசூர் கத்தோலிக்க பங்கில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
St Therasa of Child Jesus Church, Hosur
St Therasa of Child Jesus Church, Hosur

Detailing Board

Church View in the Morning

Church view as on 02nd October 2013

Flag Mast

This church was built by Rev Fr Arulraj who served as Parish  Priest of Hosur

பேட்ராயசுவாமி – வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை – Betrayaswamy (Vetaiyaadiya Swamy) Temple, Thenkanikkottai

0
பேட்ராயசுவாமி – வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை – Betrayaswamy (Vetaiyaadiya Swamy) Temple, Thenkanikkottai முகவரி: தேன்கனிக்கோட்டை – பாலக்கோடு சாலை, தேன்கனிக்கோட்டை தொ பே: தொடர்பு கொள்ள: வழிபாட்டு நேரம்: காலை: 7.30 – 12 பகல் வரை / மாலை: 5.00 – 7.30 வரைபடம்: வரைபடத்தில் காண்க பேட்ராயசுவாமி – வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை விளக்கம்: கோவிலின் தலைவாசல் கிழக்கு பார்த்து உள்ளது. ஆலயத்தின் தெய்வம் அருள் மிகு வேட்டையாடிய சுவாமி (பேட்ராயசுவாமி). அவர் ச்ரீதேவி மற்றும் பூதேவி உடன் குடி கொண்டுள்ளார். ஏழுமலை திருப்பதி ஆலயத்தின் தெய்வத்தின் சாயலை ஒத்து இங்கே காட்சி தருகிறார். அது இவ் கோவிலுக்கு மேலும் சிறப்பு தருகிறது. கோவிலின் தென் மேற்கே – தெற்கு நுழைவாயிலின் அருகே செளந்திரவள்ளி நாச்சியார் வீற்றிருக்கிறார் Description: The main gate of the temple faces the East direction. Deity of the temple is Sree Vettaiyaadiaya Piraan. The god presides the temple along with Sridevi and Poodevi. The deity looks alike that of Tirupathi, adding more specialty to the temple. On the southern side (south-west) of the main gate, Soundaravalli Naachiyaar presides. ஆலய வரலாறு:  ஆலயத்தின் மேலான்மை தமிழக அரசின் இந்து அற நலத்துறையிடம் உள்ளது. கருநாடகாவின் மான்டியா மாவட்டத்தி சார்ந்த ‘இனன்யா சாரியார்’ வழி வந்தோர் இந்த ஆலயத்தை காத்தும் அறங்காவலர்களாகவும் உள்ளனர். கசினி முகமது மற்றும் இசுலாமிய படைகள் இந்த ஆலயத்தை தாக்க முற்பட்ட போது, ஆலயத்தின் தெய்வ சிலையை துணியால் மூடி அடர்ந்த காட்டினுள் பாதுகாத்து வந்துள்ளதாக வரலாறு சான்றுகள் எடுத்துறைக்கின்றன. இசுலாமிய படைகள் விரட்டி அடிக்கப்பட்ட பின்பு தெய்வ சிலை மீண்டும் ஆலயத்தில் நிறுவப்பட்டது. இவ்வாறான சிறப்பு தொண்டாற்றியது வெங்கடபதி தாசு என்பவராவார்.  அவரின் வழி வருவோர் இப்பொழுது ஆலயத்தை காத்து வருகின்றனர். History:  The temple’s administration is with Tamil Nadu government. It is, decedents of ‘Inanyaa Chaariyaar’ who came from Karnataka’s Madya district, who maintain the temple and are the Arangkaavalar of this temple. When Gajini Muhamad and other islamic warriors came to this area, the main diety was hidden in a cloth and was taken deep into the forest to hide from them. Then after the end of the rule of islamic warriors, the statue was brought back.  This great service was done by ‘Venkatapathy Das’ and still his decedents serve the temple.

பேட்ராயசுவாமி - வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை Temple view from South West direction

Temple view from North West Direction – showing the tower along with the pond

பேட்ராயசுவாமி - வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை Art on the piller

Art on the piller

பேட்ராயசுவாமி - வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை Piller with carvings

Piller with carvings

பேட்ராயசுவாமி - வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை Roof at the entrance

Roof at the entrance

பேட்ராயசுவாமி Entrance

Entrance

பேட்ராயசுவாமி Kanva Maharishi and Adhri Maharishi - Sthala Virutchikam - Ilanthai (Bathiri) Tree

Kanva Maharishi and Adhri Maharishi – Sthala Virutchikam – Ilanthai (Bathiri) Tree

பேட்ராயசுவாமி Thoon

பேட்ராயசுவாமி Thoon

பேட்ராயசுவாமி Temple Car

பேட்ராயசுவாமி – வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை  Car

பேட்ராயசுவாமி Temple view from North East direction - Sorgavaasal is also found in this photo

Temple view from North East direction – Sorgavaasal is also found in this photo

Location chart for the temple:  From North west corner to North East

1.  Thirumadaipalli – Place to prepare Naivedhiyam for the temple

2.  Vedhaanda Desikar and Azhvaar Sannathi

3.  Krishnar Sannathi

4.  Soundaravalli Naachiyaar Sannathi (South West of the temple)

5.  Moolavar

6.  Raamar along with Seetha and Lakshman

7.  Kanva Maharishi and Aththiri Maharishi – Sthala Virutchakam – Pathiri Maram (Ilanthai Maram)

8.  Udaiyavar, Pillai Lokaach-chaa (Ulaka Achiriyar) and Manavaala MaamunikaL sannathi

9.  Yaaga Chaalai

10 Anjineyar Sannathi

11.  Kopura vaachalil Karutar Sannathi

Temple Festival:

பேட்ராயசுவாமி Denkanikottai Temple Feast 12.04.2014

Denkanikottai Temple Feast – Photo taken on 12.04.2014 by Mr Suresh of Varsha Realestate

Thala Varalaaru:

பேட்ராயசுவாமி Denkanikottai-Thala-Varalaaru

அருள்மிகு சலகண்டேசுவரர் கோவில், ஓசூர், Arul Miku Jalakanteswarar Temple, Hosur

0
அருள்மிகு சலகண்டேசுவரர் கோவில், ஓசூர், Arul Miku Jalakanteswarar Temple, Hosur முகவரி: இராமநாயக்கன் ஏரி அருகில், தேன்கனிக்கோட்டை சாலை, ஓசூர் 635109 தொ பே: தொடர்பு கொள்ள: வழிபாட்டு நேரம்: காலை: 4.00 – 10.00 வரைபடம்: வரைபடத்தில் காண்க இவ் ஆலயத்தில் தமிழில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. சைவ மதம் பின்பற்றுவோர் இங்கே வழிபாடு செய்கின்றனர். Hosur Image

Jalagandeswarar Temple Car

அருள்மிகு சலகண்டேசுவரர் கோவில், ஓசூர் Car

Kaleeswarar Temple inside Jalagandeswarar Temple

Kaleeswarar Temple inside Jalagandeswarar Temple

பிற சிற்றாலயங்களும் இந்த ஆலய வளாகத்தினுள் உள்ளது.

அகரம் பாலமுருகன் கோவில், ஓசூர் Agaram Balamurugan Koil, Hosur

0
அகரம் பாலமுருகன் கோவில், ஓசூர் Agaram Balamurugan Koil, Hosur முகவரி: Hosur – Rayakottai Road, Agaram Village, Near Onnalvadi தொ பே: 9443052672 தொடர்பு கொள்ள: மணிகன்டன் குருக்கள் வழிபாட்டு நேரம்: காலை: 7.30 – 12 பகல் வரை / மாலை: 5.00 – 7.30 வரைபடம்: வரைபடத்தில் காண்க பழமையான இந்த ஆலயத்தில் முருகர் வீற்றிருக்கிறார். ஓசூரில் இருந்து இராயக்கோட்டை செல்லும் சாலையில், சுமார் 15 கி மீ தொலைவில் அகரம் என்னும் சிற்றூரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Old and New Temple Outer View

Old and New Temple Outer View

Old temple side Mandapam

Old temple side Mandapam

Old Temple Pond

Old Temple Pond – Panoramic View

New Temple from Old temple

New Temple from Old temple

Akaram Balamurugar diety

அகரம் பாலமுருகன் கோவில், ஓசூர் Akaram Balamurugar diety

Vilva maram Opposite to Old temple

Vilvam Tree located opp. Old temple

Vilvam Fruits

Vilvam Fruits

New Temple View

New Temple View

New Temple side view

New Temple side view

New temple other view

New temple other view

Agaram Temple Front view

அகரம் பாலமுருகன் கோவில், ஓசூர் Agaram Temple Front view

Agaram Balamurugan Temple Outer view

Agaram Balamurugan Temple Outer view

Agaram Balamurugan new temple side outer view

Agaram Balamurugan new temple side outer view

Seems to be a old temple near the Balamurugan were the Moolavar has been removed

Seems to be a old temple near the Balamurugan were the Moolavar has been removed

 Thala-varalaaru: Balamurugar Thala Varalaaru

லட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில், ஓசூர், Lakshmi Venkatramana Swamy Temple, Hosur

0
லட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில், ஓசூர் Lakshmi Venkatramana Swamy Temple, Hosur முகவரி : Venkatesh Nagar, Hosur 635109 Near Alasanatham – Opp to Chandrachoodeswarar Temple தொ. பே: 084893 66738 வரைபடம்: வரைபடத்தில் காண்க மிகவும் அரிதான, மலைமேல் வீற்றிருக்கும் பெருமாளின் கோவில் இது. இவ் ஆலயத்தில் பெருமாள் லெட்சுமியுடன் அருள் தருகிறார். கோவிலின் முகப்பில், அனுமன், சிற்றாலயம் அமைத்து வீற்றிருக்கிறார். மலையை சுற்றி வலம் வருவத்தற்கு டி.வி.எஸ் குழுமத்தார் பாதை அமைத்து கொடுத்துள்ளனர்.

Entrance in the foot of the hill

Entrance to the temple at the foot of the hill

Announcement board detailing the speciality of the temple

Announcement board detailing the speciality of the temple

Steps leading the temple

Steps leading the temple

Temple tower along with Lateran Pillar seen

Temple tower along with Lateran Pillar seen

Temple - Front view

லட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில் Front view

Temple - side view

Temple – side view

Temple tower

லட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில் tower

Vinayagar Temple

Vinayagar Temple

Seethai Kulam - Pond of Seethai

Seethai Kulam – Pond of Seethai

Krishnar - carving on the rock - very old

Krishnar – carving on the rock – very old

Krishna carving - a close-up view

Krishna carving – a close-up view

மலை மீது ஒரு புனித குளம் உள்ளது. இதில் நீராடிவிட்டு செல்ல நம்பிக்கையாளர்கள் ஒரு அறிவிப்பு பலகை மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், அந்த குளத்தின் முகப்பில் கத்தவு அமைக்கப்பட்டு பெரிய பூட்டொன்று தொங்குகிறது. கோவில் ஊழியர்களிடம் வினவியதற்கு, செவாக்கு உள்ளவர்கள் மட்டுமே குளத்தில் நீராட அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தனர்.

திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர் Sacred Heart Church, Hosur

0
திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர்
Sacred Heart Church, திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர்
Sacred Heart Church, திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர்
மின்னஞ்சல் :: shc.hosur@gmail.com தொ பே :: 04344-223714 முகவரி :: தேன்கனிக்கோட்டை சாலை, ஓசூர் 635109 இணையதளம் :: வரைபடம் :: வரைபடத்தில் காண்க நிறுவப்பட்ட ஆண்டு: 1979 ஓசூர் பகுதிக்கான முதல் கத்தோலிக்க பங்கு, மத்திகிரியில் 1924-ல் துவக்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டு சூன் 10ஆம் நாள், மத்திகிரி பங்கானது பிரிக்கப்பட்டு, ஓசூர் தனி பங்கானது. திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர்

Sacred Heart Church

திருப்பலி நேரம் – Mass Timings: ஞாயிறு: காலை 06.30 , 08.30 மாலை 06.00 English Mass 10.45 AM திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்) கிழமை: காலை 06.30 வியாழன்: காலை 06.00 வெள்ளி: காலை 06.30  மாலை 06.00 (திங்களின் (மாதத்தின்) முதல் வெள்ளி மட்டும்) காரிக் (சனி) கிழமை : மாலை 06.00 மதத்தொண்டு:
 • Little Sisters of Jesus of Charles De Focauld, Little Sisters of Jesus, House No. 26 / 4,  Krishnappa colony, Hosur P.O – 635 125. Tel : 04344- 227125.
 • Franciscan Servants of Mary, Sacred Heart Convent, Santhi Nagar West, Denkanikottai Road, Hosur 635 109. Tel : 04344 – 225096
 • புனித சான் பொச்கோ துவக்கப் பள்ளி – தொ பே: 04344 225240
 • புனித சான் பொச்கோ மேல்நிலை பள்ளி – தொ பே: 04344 – 222888
 • புனித சான் பொச்கோ மழலையர் பள்ளி – தொ பே: 04344 – 221702
 • புனித கிளாராவின் ப்ணி செல்லும் பெண்களுக்கான விடுதி தொ பே: 04344 – 221702
திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர் – படக் காட்சி

Sacred Heart Church Sacred Heart Church Inner View

Sacred Heart Church Sacred Heart Church Inner View

Sacred Heart Church Sacred Heart Church Alter View

Sacred Heart Church Sacred Heart Church Front Elevation

Sacred Heart Church Sacred Heart Church Inside View

Sacred Heart Church Sacred Heart Church Inside View

Sacred Heart Church Sacred Heart Church Inside View


Sacred Heart Church, Hosur Consecration Ceremony

Sacred Heart Church Kumba Aarathi Performed by Bishop

Sacred Heart Church Hosur MLA Gopinath

Sacred Heart Church Procession Starts for Consecration Ceremony

Sacred Heart Church Rev.Fr.ArulRaj, Parish Priest and the man who stood to built this structure, Falicitating Mr.Venu Srinivasan, Chairman, TVS Motors

Sacred Heart Church Rev.Sr.Anjala who stood as the right hand to Rev. Fr. Arulraj helping him in completing the new Church project – both constructed two church buildings – a wonderful job through their dedicated spiritual life

Sacred Heart Church TVS Motors, Chairman Mr. Venu Srinivasan

அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்

0
ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்குந்து ஒட்டுநர் ஒருவர் குடிபோதையில் சரக்குந்தை தாறுமாறாக ஒட்டி அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்தனர். ஒசூரிலிருந்து கிருட்டிணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பால் ஏற்றிய சரக்குந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்குந்து ஒசூர் அருகேயுள்ள கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது அதிவேகத்தில் சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் சரக்குந்து ஒட்டுநர் சரக்குந்தை தாறுமாறாக ஒட்டி சாலையில் சென்ற கார், டெம்போ, பொதியுந்து (பிக்அப் வேன்) உள்ளிட்ட பல வண்டிகளின் மீது மோதி விபத்துகளை ஏற்படுத்தியுள்ளார். ஆனாலும் அந்த சரக்குந்து நிற்காமல் கோனேரிப்பள்ளி, சூளகிரி, சுண்டகிரி, என அடுத்தடுத்து சென்றுள்ளது. இறுதியில் சின்னாறு பகுதியில் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு வேலியில் முட்டி பின்னர் பின்னோக்கி சிறிது தொலைவு சென்று நின்றுள்ளது. இதனைப்பார்த்த வண்டி ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். தொடர்ந்து போதையிலிருந்த பால் சரக்குந்து ஒட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற சூளகிரி காவலர்கள் போதை ஒட்டுநரை மீட்டு அவசர ஊர்தி மூலம் கிருட்டிணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் கார், பொதியுந்தி, டெம்போ உள்ளிட்ட வண்டிகளில் சென்றவர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ முதலுதவி பெற்றனர். திரைப்பட காட்சிகளை போல நடந்த இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வண்டி ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.