தங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்!

Cyclist மிதிவண்டி ஓட்டுனன்
Cyclist மிதிவண்டி ஓட்டுனன்

இருக்கமான உடை அனியும் பழக்கம் உடைய ஆணா நீங்கள்? தங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்!

தோலை ஒட்டும் அளவிற்கு ஆடை அணிந்து உடற்பயிற்சியோ அல்லது மிதிவண்டி ஓட்டினால், அத்தகைய ஆண்கள் தங்கள் துணையை பிள்ளை பேறு பெறும் வாய்ப்பை தருபவர்களாக இருக்க வாய்ப்பு குறையும் என தற்போது ஆராய்சி முடிவுகள் கூறுகின்றன.

இசபல் டிரைனர் என்ற செவிலியர், உதவியுடன் கூடிய கருத்தரிப்பு நடுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அவர் தன் ஆய்வின் மூலம், தோலை இருக்கும் ஆடைகளை ஆண்கள் அணிவதால், அவர்களின் விந்தனுக்கள் தரம் கெட்டும், எண்ணிக்கை குறைந்தும், தங்கள் துணையை கருவுற இயலாத நிலைக்கு வைத்திறுக்கும் என கண்டுள்ளார்.

அவர், மேலும் தன் உதவியுடன் கூடிய கருத்தரிப்பு நடுவத்திற்கு வரும் ஆண்களை, தங்களின் விறைப்பகுதி இறுக்கமான ஆடைகள் இன்றி, காற்றோட்டம் மிக்க ஆடைகளை அணிந்து வர அறிவுறுத்துகிறார்.

இறுகிய ஆடைகள் அணிவதால், உடல் அதிகளவு சூடேற்றப்பட்டு, அவை விறைகளில் உள்ள விந்தனுக்களை தரமற்றதாகவும், செயலற்றதாகவும் மாற்றுகிறது என தன் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், விறைப்பகுதி, உடலின் மற்ற பகுதிகளை காட்டிலும் எப்பொழுத்தும் குளிர்சியாக இருந்தால் தான், தரமான விந்துக்கள் உற்பத்தியாகி, ஆண்கள் தங்கள் துணையை கருவிர செய்ய முடியும் என கூறுகிறார்.

மேலும் அவர் ஆய்வில், மிகவும் தடிமன் உள்ள சீன்ச் போன்ற ஆடைகளும் ஆண்களுக்கு நல்லதல்ல என கண்டுபிடித்துள்ளார்.