Back-to-Back Arson Incidents Reported Near Kelamangalam, Vehicles Damaged | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Back-to-Back Arson Incidents Reported Near Kelamangalam, Vehicles Damaged

📅 வெளியீடு நாள்: 20-03-2026

📄 விளக்கம்

கெலமங்கலம் அருகே மர்ம தீவைத்தல்! வாகனங்கள் தொடர்ச்சியாக எரிப்பு

A series of arson incidents has been reported near Kelamangalam in the Sultanpet area, causing concern among local residents.

According to reports, unidentified individuals allegedly set fire to vehicles parked in a cattle shed belonging to a 60-year-old resident.

A two-wheeler was completely destroyed in an incident on the night of the 15th. In a similar incident the following night, two more two-wheelers and a car were reportedly set on fire, resulting in significant damage.

Kelamangalam Police have registered a case and are conducting an investigation to identify those involved.

ஓசூரை அடுத்த கெலமங்கலம் அருகே, அடுத்தடுத்து மாட்டுக் கொட்டாய்க்கு தீ வைத்த மர்ம நபர்கள். அதிர்ச்சியில் பகுதி மக்கள்.

கெலமங்கலம் சுல்தான்பேட்டை பகுதியில் வாழ்ந்து வருபவர் 60 வயதுடைய ராஜேந்திர பிரசாத். இவரது வீட்டின் அருகே உள்ள மாட்டுக் கொட்டகையில், இரு சக்கர வண்டிகள் மற்றும் கார் ஆகியவற்றை நிறுத்துவது வழக்கமாம். மேலும் விலை மதிப்புமிக்க பொருட்களை அங்கே சேமித்து வைத்துள்ளாராம்.

கடந்த 15 ஆம் நாள் இரவு, மர்ம நபர்கள், ஒரு இருசக்கர வண்டிக்கு தீ வைத்ததை தொடர்ந்து, அந்த வண்டி முற்றிலும் தீக்கிரையானதாம். கடந்த நாள் இரவு, அதே போன்று மர்ம நபர்கள், மேலும் இரண்டு இரு சக்கர வண்டிகளுக்கும், கார் உள்ளிட்ட பிற பொருள்களுக்கும் நெருப்பு வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் இரண்டு சக்கர வண்டிகள் இரண்டும் முற்றிலும் தீக்கிரையான நிலையில், கார் தீயினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளானதாம். மேலும் பிற பொருட்களும் தீக்கிரை ஆனதாக குற்றச்சாட்டு.

இது குறித்து கெலமங்கலம் காவல் துறையினர் தீவிரமாக வினவி வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads