Illegal Lottery Rivalry Peaks in Kelamangalam: Activists Fear Violent Clashes | Hosur News Update - Video
Illegal Lottery Rivalry Peaks in Kelamangalam: Activists Fear Violent Clashes
📅 வெளியீடு நாள்: 24-09-2026
📄 விளக்கம்
A detailed report on the growing illegal lottery trade in Kelamangalam, the rivalry between agents from Palacode and Kelamangalam, and the urgent plea from local volunteers for law enforcement to intervene.
ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் லாட்டரி விற்பனை ஜோர்! உச்சம் எட்டும் தொழில் போட்டி! கோஷ் மோதல் கூட ஏற்படலாம் என அப்பகுதி தன்னார்வலர்கள் வேதனை!
லாட்டரி விற்பனையில் கெலமங்கலத்தை சேர்ந்த ஒருவரும், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் போட்டி என தகவல். இவர்கள் இருவருக்கும் சேர்த்து சுமார் 20 முகவர்கள் செயல்படுகிறார்களாம். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை அலுவலர்களிடம் தன்னார்வலர்கள் கூறியதற்கு, "மக்கள் விசில் ஊதிய பின், பிற வருமானங்களுக்கு தடை ஏற்பட்டு விட்டதால், இது மட்டுமே வருவாய் ஈட்டும் வாய்ப்பாக உள்ளது" என பதில் தருகிறார்களாம்!
இது குறித்து தன்னார்வலர் ஒருவர் கூறும் பொழுது, இரு கோஷ்டிகளும் எந்த நேரத்திலும் மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. அதனால் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.








