HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Private Omni Bus Seized in Hosur Following Passenger Complaints

Published: 20-05-2026  ·  HosurOnline

விளக்கம்

Transport authorities in Hosur seized a private omni bus after passengers complained about long delays and alleged misconduct by staff.

The bus, traveling from Nagercoil to Bengaluru, reportedly reached Hosur several hours late following a breakdown.

Officials stated that the vehicle was found operating without proper permit and tax compliance during inquiry proceedings.

பயணிகளை கெட்ட வார்த்தை திட்டிய நிறுவனம்… ஓசூரில் பேருந்து பறிமுதல்!

நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து, பழுதால் சுமார் 4 மணி நேரம் தாமதமாக ஓசூரை வந்தடைந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள், பேருந்து நிறுவனம் மற்றும் பயண சீட்டு முன்பதிவு செய்த ரெட்பஸ் நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், “ தரகு தொகைக்காக டிக்கெட் விற்பதே மட்டுமே எங்கள் பணி” என ரெட்பஸ் நிறுவனம் நழுவியதாக குற்றச்சாட்டு.

மேலும், பேருந்து நிறுவன ஊழியர் பயணிகளை ஒருமையில் பேசி கெட்ட வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பயணிகள் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில், அந்த பேருந்து அரசு அனுமதி மற்றும் வரி செலுத்தாமல் இயங்கி வந்தது தெரிய வந்ததால், பேருந்தை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தியுள்ளனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads