Sewage Stagnation Worsens Traffic Woes on Hosur Thally Road | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Sewage Stagnation Worsens Traffic Woes on Hosur Thally Road

📅 வெளியீடு நாள்: 21-05-2026

📄 விளக்கம்

Residents near the Inner Ring Road junction on Hosur’s Thally Road have raised concerns over severe sewage water stagnation caused by blocked drainage channels.

The issue comes amid a long-standing public demand for a flyover near the railway crossing to ease congestion.

Locals say the stagnant sewage is worsening traffic flow and increasing accident risks in the busy stretch.

ஓசூர் மக்கள் கேட்டது மேம்பாலம், கிடைத்தது என்னவோ சாக்கடை கழிவுநீர் தேக்கம்!.

ஓசூர் தளி சாலையில், உள் வட்டச் சாலை சந்திப்பில், இருப்புப் பாதையை தடங்கல் இன்றி கடந்து செல்வதற்கு, மேம்பாலம் அமைத்து தர சுமார் 15 ஆண்டுகளாக மக்கள் வேண்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக, கழிவு நீர் வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் சாக்கடை நீர்த்தேக்கமாக திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதி ரயில்வே கேட்டினால் போக்குவரத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்த கழிவுநீர் குட்டை மேலும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

இப்பகுதியை நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வண்டிகள் கடக்கும் சூழலில், இந்த கழிவு நீர் குட்டை, போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி பல்வேறு விபத்துக்களை ஏற்படுத்துவதாகவும் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி ஆணையர் இதற்கு தீர்வு வழங்குவார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads